சினிமா

‘தம்பி’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு ‘செம’ அட்வைஸ் சொன்ன நடிகர் சூர்யா! (வீடியோ)

கார்த்தியின் ‘தம்பி’ பட இசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் சூர்யா பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது.

‘தம்பி’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு ‘செம’ அட்வைஸ் சொன்ன நடிகர் சூர்யா! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கைதி படத்துக்குப் பிறகு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் ‘தம்பி’. டிசம்பர் 20ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் ஜோதிகா, சத்யராஜ், சவுகார் ஜானகி, நிகிலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

த்ரில்லர் பாணியிலான தம்பி படத்தின் டீசர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

‘தம்பி’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு ‘செம’ அட்வைஸ் சொன்ன நடிகர் சூர்யா! (வீடியோ)

இந்நிலையில், ‘தம்பி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று படக்குழுவை வாழ்த்திப் பேசினார் நடிகர் சூர்யா.

தொடர்ந்து பேசிய அவர், மழை பெய்த போதும் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்துள்ள ரசிகர்களுக்கு மிக்க நன்றி என சூர்யா கூறினார். மேலும், சீக்கிரம் நல்ல செய்தி சொல்றேன் என தன்னுடைய அடுத்தடுத்த படம் குறித்துக் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், வழக்கம்போல் தன்னுடைய தம்பிகளான ரசிகர்களுக்கு நள்ளிரவு மற்றும் அதிகாலை சமயங்களில் வண்டி ஓட்ட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் டீசர் வெளியீடு குறித்து 2D நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் தம்பி ஆடியோ விழாவின் போது அறிவித்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories