சினிமா

மைக்கேல் ஜாக்சன் பயோபிக் : ஆஸ்கர் வென்ற தயாரிப்பு நிறுவனம் திட்டம்!

பாப் இசையுலகின் மன்னனாகத் திகழ்ந்த மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கைப் பயணம் ஹாலிவுட்டில் பயோபிக்காக உருவாகவுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

மைக்கேல் ஜாக்சன் பயோபிக் : ஆஸ்கர் வென்ற தயாரிப்பு நிறுவனம் திட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரபல பாப் பாடகரும், டான்சருமான மைக்கேல் ஜாக்சன் இறந்த பிறகும் அவரைப்பற்றிய சர்ச்சைகளும், செய்திகளும் இன்றளவும் உலா வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் மைக்கேல் ஜாக்சனின் இசைக்கும் நடனத்துக்கும் அடிமையாகாதவர்கள் இருப்பதென்பது அரிதே.

இவ்வாறு இருக்கையில், மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை பயணத்தை படமாக்குவதாக ஹாலிவுட்டில் செய்தி உலா வந்தது. தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில், நான்கு ஆஸ்கர் விருது பெற்ற பொஹிமியன் ராப்சோடி படத்தை தயாரித்த கிரஹாம் கிங்கின் நிறுவனம் மைக்கேல் ஜாக்சன் பயோபிக் எடுப்பதற்கான உரிமத்தைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்கேல் ஜாக்சன் பயோபிக் : ஆஸ்கர் வென்ற தயாரிப்பு நிறுவனம் திட்டம்!

மேலும் மைக்கேல் ஜாக்சனின் சிறுவயது பருவம் முதல் உலக பிரபலமானது வரையிலான அனைத்து விவரங்களுக்கான உரிமத்தையும் கிரஹாம் கிங் பெற்றுள்ளதாகவும் ஹாலிவுட் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The Aviator, Gladiator & Hugo உள்ளிட்ட பிரபல படங்களுக்கு கதாசிரியராக இருந்த ஜான் லோகன் மைக்கேல் ஜாக்சனின் பயோபிக்கிற்கு கதை எழுதுகிறார். படத்தில் யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்த எந்தத் தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

banner

Related Stories

Related Stories