சினிமா

வைரலாகும் நயன்தாராவின் ‘டயானா மரியம்’ வீடியோ!

சினிமாவுக்குள் வருவதற்கு முன்பு நடிகை நயன்தாரா டிவி ஆங்கராக இருந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வைரலாகும் நயன்தாராவின் ‘டயானா மரியம்’ வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. கோலிவுட் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டு வரும் இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.

மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் வெளியான ஐயா, சந்திரமுகி ஆகிய படங்கள் மூலம் கோலிவுட்டில் கோலோச்சத் தொடங்கிய நயன்தாரா தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, விஜய், அஜித் மற்றும் முன்னணி நட்சத்திரங்களான ஆர்யா, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி என பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் உச்சம் தொட்ட நடிகையாகத் திகழ்கிறார் நயன்தாரா.

பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானாலும், சினிமாவில் பின்னடைவைச் சந்தித்தாலும் தன்னம்பிக்கையுடன் எழுந்து நின்று மீண்டும் தன்னை ஒரு உச்ச நாயகியாக நிலைநிறுத்திக் கொண்ட நயன்தாரா அண்மையில் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் நயன்தாராவுக்கு வாழ்த்துகளைக் கூறுவதோடு சினிமா துறைக்குள் நுழைவதற்கு முன்பு, மலையாள டிவி சேனலில் தொகுப்பாளினியாக இருந்த வீடியோ ஒன்றைப் பதிவிட்டு Then And Now (Lady Super Star) என்று குறிப்பிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பான அந்த வீடியோ தற்போது ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் என அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நயன்தாரா தன்னை டயானா என்று குறிப்பிட்டிருப்பார். அவரது உண்மையான பெயர் டயானா மரியம் குரியன் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories