சினிமா

கீர்த்தி சுரேஷ் பாலிவுட் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வலம் வந்த தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியிலும் தலைகாட்ட தொடங்கியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் பாலிவுட் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1950ம் ஆண்டில் இருந்து 1962 வரை இந்திய கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக இருந்த சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து ’மைதான்’ என்ற பெயரில் படமாக எடுக்கிறார் போனிகபூர்.

தென்னிந்திய மொழிகளில் கொடிக்கட்டி பறந்து வரும் தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் மைதான் படத்தின் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி ஆகவுள்ளார்.

அமித் ஷர்மா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் பாலிவுட் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் வெளியாகவிருக்ப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளதோடு, அடுத்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி படத்தை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் படத்தின் படபிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே தென்னிந்தியாவில் கீர்த்தி சுரேஷ்க்கு நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், ’மைதான்’ படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளதால் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories