சினிமா

ஆஸ்கர் விருதுபெற்ற ‘ஸ்பைடர் மேன்’ படத்தின் அடுத்த பாகம் ரிலீஸாவது எப்போது? - மார்வெல் அறிவிப்பு!

ஆஸ்கர் விருது பெற்ற அனிமேஷன் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக மார்வெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆஸ்கர் விருதுபெற்ற ‘ஸ்பைடர் மேன்’ படத்தின் அடுத்த பாகம் ரிலீஸாவது எப்போது? - மார்வெல் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஸ்பைடர் மேன் படங்களின் வரிசையில் ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுத்திருந்த படம்தான் ‘ Spider-Man: Into the Spider-Verse’. அனிமேஷன் படமான இது கடந்த ஆண்டு வெளியானது. இந்த ஸ்பைடர்மேன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியிலும் பல விருது மேடைகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சினிமா உலகின் தலைசிறந்த விருதாக கருதப்படும் ஆஸ்கரில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான விருதும் இந்தப் படத்துக்கு கிடைத்தது. இத்தனை பெருமைக்கும் உரிய இந்தப் படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்குவதற்கான வேலைகளை சோனி மற்றும் மார்வெல் நிறுவனம் தொடங்கியுள்ளது.

Spider-Man: Into the Spider-Verse படத்தை இயக்கிய Joaquim Dos Santos அதன் அடுத்த பாகத்தை இயக்கவுள்ளார். இன்னும் இந்த படத்துக்கான டைட்டில் அறிவிக்கப்படவில்லை. ஆனால், படம் 2022ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த படத்துக்கான கதையை Miles Morales எழுத, திரைக்கதையை Dave Callaham கவனிக்கிறார். ஆகையால் விரைவில் ஸ்பைடர்மேன் அனிமேஷன் படத்துக்கான அடுத்தகட்டப் பணிகள் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories