சினிமா

எண்ட்கேமை அடுத்து வரிசையாக வெளியாகும் சூப்பர் ஹீரோ படங்கள்... ரிலீஸ் தேதியை அறிவித்த மார்வெல்!

மார்வெல்லின் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸாகும் தேதிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

எண்ட்கேமை அடுத்து வரிசையாக வெளியாகும் சூப்பர் ஹீரோ படங்கள்... ரிலீஸ் தேதியை அறிவித்த மார்வெல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஹாலிவுட்டில் சமீபத்தில் நடந்த காமிக்கான் விழாவில் மார்வெல் வெளியிட்ட படங்களின் அறிவிப்புகள் தொடர்பான புது அப்டேட்டுக்காக மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், மார்வெல்லின் அடுத்த ஐந்து படங்களுக்கான ரிலீஸ் தேதிகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவை அனைத்தும் 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் வெளியாகவுள்ளது.

2022ம் ஆண்டு மூன்று படங்களை ரிலீஸ் செய்ய மார்வெல் திட்டமிட்டுள்ளது. அதில், பிப்ரவரி 18ம் தேதி ஒரு படமும், மே 6ல் ப்ளாக் பந்தர் 2ம், அக்டோபர் 7ல் அறிவிக்கப்படாத ஒரு படமும் ரிலீஸாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ட்கேமை அடுத்து வரிசையாக வெளியாகும் சூப்பர் ஹீரோ படங்கள்... ரிலீஸ் தேதியை அறிவித்த மார்வெல்!

இதனையடுத்து 2023ம் ஆண்டு நான்கு படங்கள் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. அதில், பிப்ரவரி 17, நே 5, ஜூலை 28, நவம்பர் 3 என வரிசையாக படங்கள் 2023ல் களைகட்டவுள்ளது. குறிப்பாக கேப்டன் மார்வெல் 2, டெட்புல் 2, ஃபென்டாஸ்டிக் ஃபோர் ஆகிய படங்கள் 2023ல் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், 2022, 2023ல் ரிலீஸ் ஆகும் தேதிகளை மட்டுமே மார்வெல் அறிவித்துள்ளது. எந்தெந்த தேதிகளில் எந்தெந்த படங்கள் ரிலீஸாக இருக்கிறது என்பது கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என மார்வெல் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories