சினிமா

சிங்கிள் ட்ராக் ரிலீஸ், ஆடியோ வெளியீடு எப்போது? - ‘தர்பார்’ லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!

ரஜினியின் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 7ம் தேதி நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சிங்கிள் ட்ராக் ரிலீஸ், ஆடியோ வெளியீடு  எப்போது? - ‘தர்பார்’ லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரஜினிகாந்த்தின் ‘தர்பார்’ படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டிய நிலையில் படத்தின் பாடல் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அண்மையில் படத்தின் தீம் மியூசிக்குடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியானது. இது ரஜினி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை வருகிற டிசம்பர் 7ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே, தர்பார் படத்தின் முதல் சிங்கிள் பாடல் இரண்டு வாரங்களில் வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கெனவே மோஷன் போஸ்டரில் வரும் தீம் மியூசிக் ரஜினி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்ததால் அதனை மையமாகக் கொண்ட பாடல் வெளியாகும் என்று ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories