சினிமா

மூன்றாவது முறையாக விஜய்யுடன் நேரடியாக மோதவிருக்கும் கார்த்தி : சம்மரில் போட்டாபோட்டி!?

காவலன்-, பிகில்-கைதி ஆகிய படங்களை அடுத்து கார்த்தியின் சுல்தான் படம் மூன்றாவது முறையாக விஜய் படத்துடன் ரிலீஸூக்கு போட்டிபோட தயாராகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 25ம் தேதி விஜய் - அட்லியின் பிகிலும், கார்த்தி - லோகேஷ் கனகராஜின் கைதியும் திரைக்கு வந்தது. இரு படங்களும் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியில் அசத்தலான வெற்றியை பதிவு செய்து வருகிறது.

இதற்கிடையே, லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். படம் குறித்த ஒவ்வொரு தகவல்களும் நாளுக்கு நாள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் என பலர் நடிக்கவுள்ளனர்.

மூன்றாவது முறையாக விஜய்யுடன் நேரடியாக மோதவிருக்கும் கார்த்தி : சம்மரில் போட்டாபோட்டி!?

அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு விஜய் 64 வெளியாகவுள்ளது என படத் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் ஏற்கெனவே அறிவித்திருந்தது. மேலும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வருகிற ஜனவரி 1ம் தேதி வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கைதி - பிகில் படத்தை போன்று அடுத்த ஆண்டு கோடைகால வெளியீட்டின் போது விஜய்யின் 64வது படமும், கார்த்தியின் சுல்தான் படமும் மோதவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவ்விரு படங்களும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

சுல்தான் 
சுல்தான் 

சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன்தான் சுல்தான் படத்தை இயக்கி வருகிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா தமிழில் அறிமுகமாகிறார்.

முன்னதாக, 2011ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது விஜய்யின் காவலன் படமும், கார்த்தியின் சிறுத்தை படமும் ரிலீசாகின. அப்போது சிறுத்தை படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories