சினிமா

ஒரே காரில் பண்ணைப்புரமும் அல்லிநகரமும்.. பல்லாண்டுகளுக்குப் பிறகு இணைந்த நண்பர்கள்- ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இளையராஜவும், பாரதிராஜவும் ஒன்றாக ஒரே காரில் பயணிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஒரே காரில் பண்ணைப்புரமும் அல்லிநகரமும்.. பல்லாண்டுகளுக்குப் பிறகு இணைந்த நண்பர்கள்- ரசிகர்கள் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இசையமைப்பாளர் இளையராஜாவும் இயக்குனர் பாரதிராஜாவும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நண்பர்களாக இருந்தவர்கள். இருவரும் இணைந்து பல்வேறு வெற்றிப் படங்களில் பணியாற்றியுள்ளனர்.

காலத்தால் அழியாத பல்வேறு படைப்புகளை கொடுத்த இந்தக் கூட்டணி, மனக்கசப்பு காரணமாகப் பிரிந்தது. பொதுமேடையில், இளையராஜா குறித்து பாரதிராஜா விமர்சித்ததால் பூதாகரமான மோதல், ரசிகர்களையும் வருத்தத்திற்குள்ளாக்கியது.

இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் இன்று தேனியில் சந்தித்துக் கொண்டனர். தமிழ் சினிமாவின் இருபெரும் ஆளுமைகளான பண்ணைப்புரம் இளையராஜாவும், அல்லிநகரம் பாரதிராஜாவும் தேனியில் சந்தித்துக் கொண்டது ரசிகர்களையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

ஒரே காரில் பண்ணைப்புரமும் அல்லிநகரமும்.. பல்லாண்டுகளுக்குப் பிறகு இணைந்த நண்பர்கள்- ரசிகர்கள் நெகிழ்ச்சி!

ஒரே காரில் இளையராஜாவுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாரதிராஜா, “பல ஆண்டுகளுக்குப் பிறகு இரு இதயங்கள் இணைந்தன. இயலும், இசையும் இணைந்தது; இதயம் என் இதயத்தை தொட்டது... என் தேனியில்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாடல் காப்புரிமை தொடர்பாக பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும், இளையராஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் இணைந்தனர்.

இந்நிலையில், தற்போது இளையராஜாவும், பாரதிராஜாவும் இணைந்துள்ளது தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இளையராஜாவும், பாரதிராஜாவும் இணைந்திருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories