சினிமா

இதுதான் ‘பிகில்’ கதையா..? : ஆர்வக்கோளாறில் ‘பிகில்’ படக் கதையை பேட்டியில் சொன்ன எடிட்டர் !

விஜயின் பிகில் படம் நாளை ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் கதை தொடர்பான தகவல்களை கூறியுள்ளார் எடிட்டர் ரூபன்.

இதுதான் ‘பிகில்’ கதையா..? : ஆர்வக்கோளாறில் ‘பிகில்’ படக் கதையை பேட்டியில் சொன்ன எடிட்டர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையே விஜயின் 63வது படமான பிகில் நாளை வெளியாகியுள்ளது. சிறப்பு காட்சி நீக்கம், கதைத் திருட்டு என பல சர்ச்சைகளுக்கு இடையே நாளை ’பிகில்’ ரிலீசாக இருக்கிறது.

இதுதான் ‘பிகில்’ கதையா..? : ஆர்வக்கோளாறில் ‘பிகில்’ படக் கதையை பேட்டியில் சொன்ன எடிட்டர் !

வர்த்தக ரீதியில், பிகில் திரைப்படம் பட்ஜெட்டை தாண்டி விற்பனையாகியிருந்தாலும் தீபாவளிக்குப் பிறகு விடுமுறை நாட்கள் இல்லாததால் சிறப்புக் காட்சி மற்றும் முதல் மூன்று நாள் வசூலை நம்பியே திரையரங்க உரிமையாளர்கள் உள்ளனர்.

இதுதான் ‘பிகில்’ கதையா..? : ஆர்வக்கோளாறில் ‘பிகில்’ படக் கதையை பேட்டியில் சொன்ன எடிட்டர் !

இந்நிலையில், பிகில் படத்தில் பணியாற்றிய எடிட்டர் ரூபன் யுடியூப் சேனல்களுக்கு அளித்துள்ள பேட்டியில் ’பிகில்’ படம் குறித்த பல சுவாரஸ்யத் தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இதுதான் ‘பிகில்’ கதையா..? : ஆர்வக்கோளாறில் ‘பிகில்’ படக் கதையை பேட்டியில் சொன்ன எடிட்டர் !

அதில், “பிகில் படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டிருக்கு. அரசியல்வாதிகள் சிலர் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் போது அதனை மக்களிடம் இருந்து பெற்று திரும்பவும் அரசியல்வாதிகளிடமே ஒப்படைப்பது, விஜயின் பெரும்பாலான நக்கல் மற்றும் காமெடி நிறைந்த காட்சிகள், நயன்தாராவுக்கும் விஜய்க்கும் இடையேயான காதல் காட்சிகள் என Deleted Scenes அதிகம் இருக்கு.

இதுதான் ‘பிகில்’ கதையா..? : ஆர்வக்கோளாறில் ‘பிகில்’ படக் கதையை பேட்டியில் சொன்ன எடிட்டர் !

படத்தில் மொத்தம் 6 பாடல்கள், 6 Fight Sequences, 5 கால்பந்து போட்டிகள் உள்ளது. பிகில் படத்தில் வரும் ஒவ்வொரு விஜய் கதாப்பாத்திரத்துக்கும் மாஸான அறிமுக சீன்கள் இருக்கு.

குறிப்பாக நேப்பியர் பாலத்தில் வரும் சண்டைக் காட்சிகளில் விஜய் அநாயசமாக புகுந்து விளையாடி இருக்கிறார் எனக் கூறியுள்ளார் ரூபன். மேலும், படத்தில் முதல் பாதியில் 3 பாடல்களும், பிற்பாதியில் 3 பாடல்களும் இடம்பெற்றிருக்கும்.

இதுதான் ‘பிகில்’ கதையா..? : ஆர்வக்கோளாறில் ‘பிகில்’ படக் கதையை பேட்டியில் சொன்ன எடிட்டர் !

முதல் பாதியில் வரும் 3 பாடல்களில் வெறித்தனமும் ஒன்று. இது ஹீரோ introduction பாடலாக மட்டும் இல்லாமல் திருவிழாவை போல இருக்கும். பிகில் படம் முழுக்க முழுக்க ராயப்பனை மையப்படுத்தியே திரைக்கதை நகரும்.

இதுதான் ‘பிகில்’ கதையா..? : ஆர்வக்கோளாறில் ‘பிகில்’ படக் கதையை பேட்டியில் சொன்ன எடிட்டர் !

கால்பந்து மூலமாக தன் மீது தனது சமூதாயத்தின் எண்ணோட்டங்களை மாற்றும் கதாப்பாத்திரமே ராயப்பன் வலம் வருவார். கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான காட்சிகள் 30 சதவிகிதம் மட்டுமே மைதானத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. எஞ்சியவை அனைத்தும் கிராஃபிக்ஸ் பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது என ரூபன் கூறியுள்ளார்.

இந்நிலையில், ரூபனின் பேச்சு குறித்து நெட்டிசன்கள் பலர் படம் ரிலீசாவதற்கு முன்பு இணையத்தில் படத்தை வெளியிடுவது போன்று ஒவ்வொரு காட்சி குறித்து நேர்காணலில் பேசியிருக்கிறார் என பல வகையில் விமர்சித்துள்ளனர். இருப்பினும் விஜய் ரசிகர்களுக்கு ரூபனின் பேட்டியின் மூலம் படம் மீதான எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.

banner

Related Stories

Related Stories