சினிமா

“சாவடிக்கிறப்பா நீ.. உன்கிட்ட மாட்டிட்டு சாகறதுக்கு மேலயே போயிடலாம்”: மேடையில் சண்டையிட்ட விக்ரம்-துருவ்!

ஆதித்யா வர்மா இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மேடையில் விக்ரமும், துருவ்வும் செல்லமாக சண்டையிட்ட காணொளி வைரலாகி வருகிறது.

“சாவடிக்கிறப்பா நீ.. உன்கிட்ட மாட்டிட்டு சாகறதுக்கு மேலயே போயிடலாம்”: மேடையில் சண்டையிட்ட விக்ரம்-துருவ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அர்ஜூன் ரெட்டி படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது ‘ஆதித்யா வர்மா’. இதில் அறிமுக நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்துள்ளார். துருவ்வுக்கு ஜோடியாக பனிதா நடித்துள்ளார். E4 Entertainment நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை அர்ஜூன் ரெட்டி படத்தில் பணியாற்றிய கிரிசய்யா இயக்கியுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வருகிற நவம்பர் 8ம் தேதி ஆதித்யா வர்மா படம் வெளிவரவுள்ளது. இதற்கிடையே, படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. அப்போது நடிகர் விக்ரமும் அவரது மகன் துருவ்வும் மேடையில் பேசி தங்களது உற்சாகத்தைப் பகிர்ந்துகொண்டனர்.

“சாவடிக்கிறப்பா நீ.. உன்கிட்ட மாட்டிட்டு சாகறதுக்கு மேலயே போயிடலாம்”: மேடையில் சண்டையிட்ட விக்ரம்-துருவ்!

அதில் “எனக்கு துருவ் மாதிரி பேசத் தெரியாது. ரொம்ப டென்ஷனா இருக்கு. சேது ரிலீஸ் ஆகும்போதோ, +2 ரிசல்ட் வெளியாகும்போதோ டென்ஷன் இல்ல. ஆனால் இன்னிக்கு ரொம்ப டென்ஷனா இருக்கு. துருவ் நடிகரா, இயக்குநரா இல்ல வேற எதுவா ஆகப்போறாருன்னு யோசிச்சி பார்த்ததில்ல. நிறைய கற்பனை வளமுள்ளவர். அதனால் என்ன வேணாலும் ஆகுனு சொன்னேன். அவர் சினிமாவை தேர்ந்தெடுத்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுக்கு முகேஷ் மேத்தாவுக்குதான் நன்றி சொல்லணும்.

அர்ஜூன் ரெட்டி மாதிரியான அழகான கதையம்சம் கொண்ட படத்தை ரீமேக் செய்யும் உரிமையை முகேஷ் அந்தப் படம் ரிலீசாவதற்கு முன்பே வாங்கிவிட்டார். அதில் துருவ் தான் நடிக்கணும்னு அவர் ஆசைப்பட்டார். துருவ்வின் ஒரேயொரு டப்ஸ்மாஷ் பார்த்து நம்பிக்கை வைத்து அவரை நடிக்க வைக்க ஆசைப்பட்டவர் முகேஷ். ஆனால் நான் ரொம்பவே யோசித்தேன்.

அர்ஜூன் ரெட்டி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க துருவ்வால் முடியுமானு பயந்தேன். ஆனால் ஒரு தந்தையா நான் எதுவும் துருவ் குறித்து சொல்ல விரும்பல. நீங்க படம் பார்த்துட்டு சொல்லுங்க” என மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் விக்ரம் பேசினார். பின்னர், ஆதித்யா வர்மா படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

“சாவடிக்கிறப்பா நீ.. உன்கிட்ட மாட்டிட்டு சாகறதுக்கு மேலயே போயிடலாம்”: மேடையில் சண்டையிட்ட விக்ரம்-துருவ்!

இறுதியாக மேடையை விட்டுச் செல்லும் முன், “அர்ஜூன் ரெட்டி படத்தில் வரும் ஏதேனும் ஒரு சீனை நடித்துக் காட்டும்படி விக்ரம் கேட்க, அதற்கு துருவ் ‘ஏன் இப்டி மாட்டி விடுறீங்க’ எனச் சொல்ல அரங்கம் கலகலத்தது. அதன் பிறகும் துருவ்வை விடாமல் ஆதித்யா வர்மாவில் வரும் துளு டயலாக்கை பேசும்படி கூற துருவ்வும், அதனை மேடையில் நடித்துக் காட்டினார். மீண்டும் துளு டயலாக் மட்டும் சொல்லு என விக்ரம் நிர்பந்திக்கும்போது, “சாவடிக்கிறப்பா நீ... சாவடிக்கிறப்பா” என்று துருவ்வும் செல்லமாக விக்ரமிடம் சண்டையிட்டார்.

அதனையடுத்து, “ ‘எங்கப்போற, அவ்வளவுதானா’ என துருவ் கேட்க, பின்னர் அரங்கத்தைப் பார்த்து விக்ரமை பழிவாங்கும் விதமாக “அப்பாவை சேது டயலாக் பேசச் சொல்லுங்க” எனக் கேட்டார். மகனின் ஆசையை நிறைவேற்றும் விதமாக “ஒரு காலத்துல ரொம்ப சந்தோஷமா இருந்தேண்டி, என்னிக்கு உன்ன பார்த்தனோ அன்னிக்கு பிடிச்சது” என சேது டயலாக்கை பேசி விக்ரமும் அசத்தினார். இதனை கேட்டதும் அரங்கம் கைதட்டல்களால் நிறைந்தது.

“சாவடிக்கிறப்பா நீ.. உன்கிட்ட மாட்டிட்டு சாகறதுக்கு மேலயே போயிடலாம்”: மேடையில் சண்டையிட்ட விக்ரம்-துருவ்!

தற்போது ஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா மேடையில் விக்ரமும், துருவ்வும் பேசிய வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories