சினிமா

DC காமிக்ஸின் அடுத்த பிரமாண்டத்தில் 'தி ராக்'!

ஹீரோயிசம் கலந்த வில்லனாக டிசி காமிக்ஸ் படத்தில் கால் பதிக்கிறார் உலகப் புகழ்பெற்ற ராக் எனும் வெயின் ஜான்சன்.

DC காமிக்ஸின் அடுத்த பிரமாண்டத்தில் 'தி ராக்'!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காமிக்ஸ் புத்தகங்களை மையமாக வைத்து ஹாலிவுட்டில் டி.சி மற்றும் மார்வெல் நிறுவனங்கள் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இதில் இவ்விரு நிறுவனங்களுக்கும் இடையேயும் இதன் ரசிகர்களுக்கு இடையேயும் கடும் போட்டி நிலவி வருகிறது.

கடந்த பத்து ஆண்டுகளாக இந்த போட்டியில் மார்வெல் நிறுவனமே வெற்றிப் பெற்று வருகிறது. டி.சிக்கு கடந்த மூன்று ஆண்டுகளாகதான் கொஞ்சம் ஏறுமுகம் இருந்து வருகிறது. அதில், வரிசையாக வெளியான 'சூசைட் ஸ்க்வாட்', 'வொண்டர் வுமன்', 'ஜஸ்டிஸ் லீக்', 'அக்வாமென்', 'ஷசாம்', 'ஜோக்கர்' ஆகிய படங்கள் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்து தோல்வியில் துவண்டிருந்த டி.சி காமிக்ஸை மீட்டெடுத்தது.

DC காமிக்ஸின் அடுத்த பிரமாண்டத்தில் 'தி ராக்'!

தற்போது 'சூசைட் ஸ்க்வாட் 2', 'வொண்டர் வுமன் 2', 'அக்வாமென் 2' ஆகிய படங்களின் சீக்வல் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து, ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த 'பிளாக் ஆடம்' எனும் சூப்பர் வில்லனை திரையில் கொண்டு வரும் முயற்சியில் டி.சி இறங்கியுள்ளது.

இது 'ஷசாம்' படத்தின் கதையோடு தொடர்புடைய கதை என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ஒரு சிறுவனுக்கு கிடைக்கும் அதீத சக்தியினால் அவன் சூப்பர் ஹீரோவாக மாறி மக்களை காப்பாற்றும் மாதிரியான கதைக்களம் 'ஷசாம்' படத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியில் 'பிளாக் ஆடம்' எனும் சக்தி வாய்ந்த வில்லனை ஷசாம் எதிர்க்கொள்ளும் வகையிலான திரைக்கதை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DC காமிக்ஸின் அடுத்த பிரமாண்டத்தில் 'தி ராக்'!

பிளாக் ஆடம் எனும் அந்த சூப்பர் வில்லன் கதாப்பாத்திரத்தில் உலகப்புகழ் பெற்ற நடிகர் ராக் எனும் வெயின் ஜான்சன் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சூப்பர் ஹீரோவுக்கு நிகரான சூப்பர் வில்லன் கதாப்பாத்திரம் என்பதால் இதற்கு வெயின் ஜான்சனை படக்குழு தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த படத்துக்கான ஆரம்பக்கட்ட வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை Jaume Collett-Serra இயக்கவுள்ளார்.

banner

Related Stories

Related Stories