சினிமா

“ப்ரேமமும் பின்னே ஆக்‌ஷனும்” - நிவின் பாலி பிறந்ததின சிறப்புப் பகிர்வு!

மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோ நிவின் பாலி பிறந்ததினம் இன்று.

“ப்ரேமமும் பின்னே ஆக்‌ஷனும்” - நிவின் பாலி பிறந்ததின சிறப்புப் பகிர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஒரு மாஸ் ஹீரோவின் வெற்றிக்குத் தேவைப்படுவது, உண்மையில் கொஞ்சம் வித்தியாசமானது. உருகி உருகி காதலிக்கும், நூறு பேர் வந்தாலும் எதிர்த்து அடிக்கும் அப்படியான ஹீரோவிடம் கொஞ்சம் அசட்டுத்தனம் இருக்கவேண்டும். ரஜினி, விஜய் என எல்லோரிடமும் காணக்கிடைக்கும் காம்போ இது. சமீபத்திய ஹீரோக்களில் இதைக் கொண்டிருந்த ஒரு நடிகன் நிவின் பாலி. அவருடைய பிறந்தநாளான இன்று வாழ்த்துகளுடன் கூடிய ஒரு சின்ன ரீகேப்.

தென்னிந்தியா முழுவதும் ஒரு பெரிய மார்க்கெட்டைப் பெற்றிருக்கும் இந்தக் கலைஞன் சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்வரை நடிப்பதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் பெங்களூரு Infosys-ல் சாஃப்ட்வேர் என்ஜினீயராக வேலைபார்த்துக் கொண்டிருந்தவர். தந்தையின் இழப்பிற்குப் பிறகு கேரளா வந்திருந்தவரை தன்பக்கம் இழுத்துக்கொண்டது மலையாள சினிமா, முதலில் கொஞ்சம் ஓரவஞ்சனை செய்தாலும்!

“ப்ரேமமும் பின்னே ஆக்‌ஷனும்” - நிவின் பாலி பிறந்ததின சிறப்புப் பகிர்வு!

ஆம், 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' படத்திற்கான ஆடிஷனுக்கு சென்றவரை ஷார்ட்லிஸ்டில் கூட சேர்க்காமல் திருப்பி அனுப்பிவிட்டனர். அதில் நடிக்கவிருந்த மற்றொரு நடிகர் வராமல்போக அந்த வாய்ப்புதான் நிவினுக்குக் கிட்டியது. அதன்பின் சில படங்களில் தலைகாட்டியிருக்கிறார்.

அப்போதுதான் அல்போன்ஸ் புத்ரன், வினீத் ஸ்ரீனிவாசன், நிவின் என்னும் மலையாள சினிமாவிற்கான அடுத்த தலைமுறை அடையாளத்தை உருவாக்கிய காம்போ ஒன்றிணைந்தது. அல்போன்ஸ் இயக்கிய 'நெஞ்சோடு சேர்த்து' எனும் மியூசிக் ஆல்பத்தில் நிவின், நஸ்ரியாவோடு இணைந்து நடித்தார். யூடியூபில் வைரல் ஹிட் அடித்து நிவினை கேரளா முழுதும் அறிமுகப்படுத்தியது அந்த ஆல்பம்.

“ப்ரேமமும் பின்னே ஆக்‌ஷனும்” - நிவின் பாலி பிறந்ததின சிறப்புப் பகிர்வு!

ஆனால் உண்மையில் 2012ல் தான் நிவின் தன் சினிமா கேரியரை மாஸாக தொடங்குகிறார். இயக்குனர் வினீத் ஸ்ரீனிவாசன் எழுதி இயக்கி, நிவின், இஷா நடிப்பில் உருவான 'தட்டத்தின் மறயத்து' என்ற படம் ரிலீஸாகிறது‌. கேரளத்தின் மொத்த இளம் தலைமுறையும் தங்களுக்கான காதல் கதை இது என படத்தைக் கொண்டாடியது. பின் ராஜேஷ் பிள்ளை, ஆஷிக் அபு, ஷ்யாம் பிரசாத் என மலையாளத்தின் முன்னணி இயக்குநர்களிடமிருந்து தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன.

ஆனாலும் தனக்கான சரியான இயக்குநரைத் தேடிக்கொண்டிருந்த நிவின், தன்னை வைத்து பல குறும்படங்கள் எடுத்த அல்போன்ஸ் புத்ரனிடமே மீண்டும் தஞ்சமடைந்தார். மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலுமே ரிலீசான 'நேரம்' படத்தை உருவாக்கினர். இரண்டு மொழிகளிலுமே செம்ம ஹிட், பாடல்கள் மாஸ் ஹிட், மலையாள சினிமாக்கள் மீது எப்போதும் சொல்லப்படும் மெதுவாக நகர்வது என்ற குற்றச்சாட்டில்லாமல் படம் பரபரப்பாக இருந்தது, ஹீரோவாக நிவின் ஜெயித்தார். எடிட்டிங், கேமரா, பின்னணி இசை என அனைத்திலும் புது முயற்சி இருந்தது இப்படி மலையாள சினிமா உலகம் அதுவரை அறிந்திராத ஒரு ஹிட்டை அளித்தனர். அந்த வெற்றியின் தொடர்ச்சிதான் 'பிரேமம்'.

“ப்ரேமமும் பின்னே ஆக்‌ஷனும்” - நிவின் பாலி பிறந்ததின சிறப்புப் பகிர்வு!

இதற்கு நடுவில் '1983', 'ஓம் ஷாந்தி ஓசானா', 'பெங்களூர் டேஸ்', 'வடக்கன் செல்ஃபி' என பல ஹிட் கொடுத்திருக்கிறார் நிவின். ஆனால் பிரேமம் ஹிட் என்பதே நிவினின் அடையாளம். காரணம் எளிதானது, வெறும் மூன்றரைக் கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட படத்தின் தியேட்டர் வசூல் மட்டும் கிட்டத்தட்ட 70 கோடி. மூன்று விதமான காலநிலை, ஒரு ஆண் தன் வாழ்நாளில் அடையும் மூன்று விதமான வளர்ச்சிநிலை, இதுதான் படத்தின் சாராம்சம். மொத்தப் படத்தையும் ஒற்றையாளாகத் தாங்கியிருப்பார் நிவின். அதுதான் அவரை கேரளா தாண்டி தென்னிந்தியா முழுதும் கொண்டுசேர்த்தது.

‘லவ் ஆக்ஷன் டிராமா’ போன்ற ஏமாற்றங்களும், ‘ஆக்ஷன் ஹீரோ பிஜூ’ போன்ற மாஸ் ஹிட்களும், ‘காயன்குளம் கொச்சுண்ணி’ போன்ற வித்தியாச முயற்சிகளுமாக எல்லாம் சேர்த்துதான் இருக்கிறது நிவினின் கிராஃப். ஆனாலும் எப்போதும்போல் நாங்கள் மூத்தோனுக்குக் காத்திருக்கிறோம். எப்போதும்போல ரசிகனை சக பயணியாக்கி தொடர்ந்து பயணியுங்கள் நிவின்!

banner

Related Stories

Related Stories