சினிமா

தொடங்கியது விஜய் 64 ஷூட்டிங் : இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! (புகைப்படங்கள்)

நடிகர் விஜய்யின் 64வது படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கியது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடங்கியது விஜய் 64 ஷூட்டிங் : இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! (புகைப்படங்கள்)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் விஜய்யின் 63வது திரைப்படமாக உருவாகியுள்ள பிகில் இந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, இந்துஜா, கதிர், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பிகில் படத்துக்கான பணிகள் முடிவடைந்ததை அடுத்து, தனது 64வது படத்துக்காக மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தொடங்கியது விஜய் 64 ஷூட்டிங் : இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! (புகைப்படங்கள்)

இதனையடுத்து படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ‘அங்கமாலி டைரீஸ்’ ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிப்பதை உறுதி செய்து அண்மையில் ட்விட்டரில் அறிவித்தது தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி கிரியேட்டர்ஸ்.

இதற்கிடையே, பிகில் படம் ரிலீஸாவதற்குள் விஜயின் 64வது படம் குறித்த அப்டேட்டுகள் தினசரி அறிவிக்கப்பட்டு வந்ததால் விஜய் ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

தொடங்கியது விஜய் 64 ஷூட்டிங் : இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! (புகைப்படங்கள்)

இந்தப் படத்துக்கு தலைப்பு எதுவும் இப்போதைக்கு வைக்கப்படாததால் விஜய் 64 என்றே அழைக்கப்பட்டு வருகிறது. மேலும், படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அக்டோபர் முதல் வாரத்திலேயே தொடங்கப்படும் என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இன்று விஜய் 64 படத்துக்கான பூஜை சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில், நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், அனிருத், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடங்கியது விஜய் 64 ஷூட்டிங் : இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! (புகைப்படங்கள்)

ஒரு படம் வெளிவந்த பிறகே நடிகர் விஜய் அடுத்த படத்தில் கமிட்டாவது வழக்கம். ஆனால், பிகில் படத்தின் டீசர் கூட இதுவரையில் வெளியாகாமல் உள்ள நிலையில் தனது அடுத்த படத்துக்கான வேலைகள் அனைத்தும் படு ஜோராக நடைபெற்று வருவது விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

அவ்வாறு படத்தில் நடிப்பது தொடர்பான தகவல்கள் வெளிவந்தாலும், படம் குறித்த முக்கிய அறிவிப்புகள் ஏதும் அவ்வளவு எளிதில் வெளிவராதபடியே இதுவரை இருந்து வந்தது. ஆனால் தற்போது விஜய் 64 படம் தொடர்பாக அடுத்தடுத்து அப்டேட்கள் வந்தது மட்டுமல்லாமல், படப்பிடிப்பும் உடனே நடைபெறுவது இதுவே முதல் முறை.

தொடங்கியது விஜய் 64 ஷூட்டிங் : இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! (புகைப்படங்கள்)

மேலும், விஜய் 64 படத்தின் படப்பிடிப்புகளை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் முடிவடையும் வகையில் படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால் விஜய் 64 அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வெளியாகும் என தயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே மாநகரம் படத்தின் கதையின் மூலம் ரசிகர்களை ஈர்த்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அடுத்தப் படமான கைதி தீபாவளியையொட்டி வெளியாக உள்ளது.

தொடங்கியது விஜய் 64 ஷூட்டிங் : இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! (புகைப்படங்கள்)

இது பிகில் படத்துடன் போட்டி போடும் அளவுக்கு இருக்கும் நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பது மேலும் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது. குறிப்பாக விஜய்யின் மற்ற கமர்ஷியல் படங்களைப் போன்று இல்லாமல் கதைக்கும், திரைக்கதைக்கும் முக்கியத்துவம் இருக்கும் வகையில் விஜய் 64 அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், விஜய் 64 படத்தின் பூஜை நடத்தப்பட்டதற்கான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டதை அடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொடங்கியது விஜய் 64 ஷூட்டிங் : இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! (புகைப்படங்கள்)

இவற்றையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு ட்விட்டரில் #Thalapathy64Pooja என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் வைரலாக்கியதை அடுத்து இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது இந்த ஹேஷ்டேக்.

banner

Related Stories

Related Stories