சினிமா

சிவகார்த்திகேயனின் கிராஃபில் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ ஏற்றமா? இறக்கமா? - விமர்சனம்

சிவகார்த்திகேயன் நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ திரைப்படம் எப்படி இருக்கிறது?

சிவகார்த்திகேயனின் கிராஃபில் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ ஏற்றமா? இறக்கமா? - விமர்சனம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
இனியவன்
Updated on

இயக்கம் : பாண்டிராஜ்

நடிப்பு : சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, நட்ராஜ், பாரதிராஜா மற்றும் பலர்.

இசையமைப்பாளர் : டி.இமான்

ஒளிப்பதிவு : நீரவ் ஷா

எடிட்டிங் : ரூபன்

கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றி தந்த தைரியத்தில் எடுக்கப்பட்ட இன்னொரு படம்தான் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’. ஒரு பெரிய குடும்பம், உறவினர்களுடனான பிரச்னைகள், கிராமத்து மரபு சார்ந்த பழக்கவழக்கங்கள், ஏனென்றே தெரியாத ஒரு ஹீரோயின் என அத்தனை டெம்ப்ளேட்டும் உள்ளிருக்கிறது. அதோடு, அண்ணன் - தங்கை சென்டிமென்ட்டும்.

இப்படியாக தியேட்டரில் ரசிக்கப்பட்டு பின் டி.வி-யில் கொண்டாடப்படப்போகும் ஒரு திரைப்படத்தைத்தான் தான் எடுக்கப்போகிறோம் என முடிவுசெய்த  இயக்குனர் பாண்டிராஜ் அதில் என்ன பேசவேண்டும் என முடிவெடுத்ததில் தான் கவனம் பெறுகிறார். படத்தின் வில்லன் கதாபாத்திரம் ஒரு கொலைக்கு இன்னொரு கொலையே பதில் என நம்புகிறது. இதை தவறெனக் கூறும் ஹீரோ கதாபாத்திரம் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு தீர்வை முன்வைக்கிறது. ஆனால் அந்த இடத்தில் ஒரு பெண் இவர்கள் அனைவரையும் தவறெனக்கூறி எல்லோருக்குமான ஒரு தீர்வை முன்வைக்கிறார்.

சிவகார்த்திகேயனின் கிராஃபில் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ ஏற்றமா? இறக்கமா? - விமர்சனம்

வெறும் ஆண்களுக்கான உலகமாக இதைக் கருதும் எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டிய ஒரு கருத்து இந்த உலகச் சக்கரத்தின் மையப்புள்ளி பெண்கள் தான். அவர்கள் செய்யும் தியாகங்களில்தான் ஆண் சமூகம் தன் வீரத்தை நிலைநிறுத்திக்கொள்கிறது. ஆனால் பெண்களை தியாகம் செய்யவைப்பதற்கு பதில் அவர்களிடம் தீர்வைக் கேட்டுப்பாருங்கள். இந்த மொத்த சமூகத்திற்கான பிரச்னைக்கும் அவர்களால்தான் தீர்வைத் தரமுடியும்‌. இதைத்தான் அழுத்தமாக வலியுறுத்துகிறது நம்ம வீட்டுப் பிள்ளை.

அவ்வப்போது காமெடி, கொஞ்சம் காதல், எக்கச்சக்கமாக சென்டிமென்ட் இந்த அளவில் நிறைந்திருக்கிறது காட்சிகள். சில படங்களுக்குப் பிறகு மீண்டும் ஸ்கோர் செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன். பெண்கள் அண்ணணாக சிவகார்த்திகேயனை கொண்டாடுவதற்கு அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது. சமீபத்திய படங்களின் தோல்வியை இந்தப் படம் மீட்டெடுக்கும். ஹீரோயின் அனு இம்மானுவேல் அழகாக தனித்து தெரிகிறார், படத்திலிருந்தும்.

சிவகார்த்திகேயனின் கிராஃபில் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ ஏற்றமா? இறக்கமா? - விமர்சனம்

சூரி பெரிதாக சிரிக்க வைக்கவில்லை என்றாலும் பெரிதாக தொந்தரவும் செய்யவில்லை என்பது பெரும் ஆறுதல். மாறாக காமெடியில் அசரடிக்கிறார் ‘முந்திரிக்கொட்டை’ பாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் பாண்டிராஜ் மகன். ஐஸ்வர்யா ராஜேஷ் பெரிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பெரிதாக ஈர்க்கவில்லை. சமுத்திரக்கனி, நட்டி, பாரதிராஜா என ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். யாரும் மனதில் நிற்காத அளவிற்கே திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.

படத்தின் பெரும்பலம் இசையமைப்பாளர் இமான். அத்தனை பாடல்களுமே நன்றாக வந்திருக்கிறது. பிண்ணணி இசையும் நன்றாகவே வந்திருக்கிறது. இவர் இப்படியான படங்கள்தான் செய்வார் என்ற எண்ணத்தை உடைத்து கிராமத்து கதையிலும் தன்னை நிரூபித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. மொத்தத்தில், படத்தில் மைனஸ்கள் ஆங்காங்கே இருந்தாலும் திரைக்கதையும், கிளைமாக்ஸும் படத்தை வெற்றிபெற வைக்கும்.

banner

Related Stories

Related Stories