சினிமா

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட கல்லி பாய் திரைப்படம்!

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான கல்லி பாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட கல்லி பாய் திரைப்படம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஸோயா அக்தர் இயக்கத்தில் பிப்ரவரி மாதம் வெளியான இந்தி திரைப்படம் 'கல்லி பாய்'. ரன்வீர் சிங், அலியா பட், சித்தாந்த் சதுர்வேதி, கல்கி கோச்லின் எனப் பலரும் நடித்திருந்தனர்.இந்தப் படம் சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் பாராட்டுகளைப் பெற்றதோடு, வசூல் ரீதியிலும் வெற்றியடைந்தது.

பெர்லின் திரைவிழாவிலும் திரையிடப்பட்ட இந்தப் படம், தற்போது இந்தியா சார்பாக சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்காக 28 இந்தியப் படங்கள் போட்டியிட்டன. சூப்பர் டீலக்ஸ், ஒத்த செருப்பு, வட சென்னை ஆகிய மூன்று தமிழ்ப் படங்களும் போட்டியிட்டன. இந்நிலையில் 'கல்லி பாய்' தேர்வு செய்யப்படதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஆஸ்கர் விருதை இதுவரை எந்த ஒரு இந்தியப் படமும் பெறவில்லை என்ற நிலையை 'கல்லி பாய்' மாற்றுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

banner

Related Stories

Related Stories