சினிமா

“சுதந்திரத்துக்கான முதல் போர்” - வெளியானது சைரா நரசிம்மா ரெட்டி பட ட்ரெய்லர்!

சிரஞ்சீவியின் சரித்திர படமான சைரா நரசிம்மா ரெட்டியின் ட்ரெய்லர் யூடியூபில் வெளியானது.

“சுதந்திரத்துக்கான முதல் போர்” - வெளியானது சைரா நரசிம்மா ரெட்டி பட ட்ரெய்லர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிரஞ்சீவிக்கு ‘கைதி நம்பர் 150’ படத்துக்குப் பிறகு, பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் சைரா நரசிம்மா ரெட்டி. இந்த படம் இந்தியாவின் சுதந்திரத்துக்காக பிரிட்டிஷ்காரர்களிடம் போராட்டத்தில் ஈடுபட்ட, ஆந்திராவின் ராயலசீமாவைச் சேர்ந்த உய்யாலவாடா நரசிம்மா ரெட்டியின் போர் ஸ்திரம் குறித்தது.

சிரஞ்சீவியின் 151வது படமாக உருவாகியுள்ள சைரா நரசிம்மா ரெட்டியில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, சுதீப், நயன்தாரா, தமன்னா, ஜெகபதிபாபு உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ள சைரா நரசிம்மா ரெட்டி படத்தை சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம்சரண் தேஜா தயாரித்துள்ளார். அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

மூத்த நடிகர்கள் உட்பட பலர் நடித்துள்ளதால் சைரா நரசிம்மா ரெட்டி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது.

அக்டோபர் 2ம் தேதி ரிலீஸாகவுள்ள இந்த படத்தின் ட்ரெய்லரை தற்போது படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளது. வெளியான சில மணிநேரங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது இந்த ட்ரெய்லர். மேலும் ட்விட்டரிலும் #SyeRaaTrailer என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

banner

Related Stories

Related Stories