சினிமா

‘வௌவால்’ போன்று தொங்கும் ரகுல் ப்ரீத் சிங் - வைரலாகும் உடற்பயிற்சி வீடியோ !

‘வௌவால்’ போன்று தொங்கி யோகா செய்யும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் வீடியோ- புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.  

‘வௌவால்’ போன்று தொங்கும் ரகுல் ப்ரீத் சிங் - வைரலாகும் உடற்பயிற்சி வீடியோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

தமிழில் தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே, தெலுங்கில் கதாநாயகடு, மன்மதடு 2 ஆகிய படங்களில் நடித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் தீவிரமாக நடித்து வருகிறார். தமிழில் கமலுடன் இந்தியன்-2 படத்திலும், சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் தனது உடலமைப்பைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள படப்பிடிப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் தினந்தோறும் உடற்பயிற்சி நிலையத்திற்குச் சென்று உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

‘வௌவால்’ போன்று தொங்கும் ரகுல் ப்ரீத் சிங் - வைரலாகும் உடற்பயிற்சி வீடியோ !

அவர் தனது கவர்ச்சிப் படங்களுடன், உடற்பயிற்சி செய்யும் படங்களையும் அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்து வருகிறார்.

அந்த வகையில், அவர் ஏரியல் யோகா எனப்படும் வௌவால் போன்றுதொங்கிக் கொண்டு செய்யும் யோகா உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அவருடைய, ஏரியல் யோகா வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories