சினிமா

கதையைத் திருடி படம் எடுக்கும் இயக்குநர்களுக்கு குட்டு வைத்த இயக்குநர் பாக்கியராஜ்!

தமிழ் சினிமாவில் கதை திருட்டு தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவது வருத்தமளிப்பதாக இயக்குனர் கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

கதையைத் திருடி படம் எடுக்கும் இயக்குநர்களுக்கு குட்டு வைத்த இயக்குநர் பாக்கியராஜ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஆரி - ஷாஷ்வி பாலா ஜோடியாக நடித்துள்ள படம் ''எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்''. இந்தப்படத்தில் முகமது அபூபக்கர், பகவதி பெருமாள், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் பேசிய பாக்யராஜ், ''ஏலியனை மையமாக வைத்து இதை படத்தை எடுத்துள்ளனர் என கருதுகிறேன். 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்' என்று நினைத்துக்கொண்டு இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தையும், மேல இருக்குறவன் பாத்துப்பான் என்று நினைத்து கோட்டை விட்டுவிட வேண்டாம்.

சினிமாவில் கதை திருட்டுகள் நடப்பதாக அதிகமான புகார்கள் வருகின்றன. சந்தன கடத்தல் வீரப்பன் கதையை யாரும் படமாக எடுக்கலாம். ஆனால், ஒரு கதையை அப்படியே காப்பி அடித்து படம் எடுப்பது தவறு'' இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக கடந்தாண்டு நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்திற்கு கதை திருட்டு பிரச்சனையில் சிக்கியது. அப்போது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவராக இருந்த இயக்குநர் கே.பாக்யராஜ் வருண் ராஜேந்திரன் எழுதிய செங்கோல் கதையின் கருவும் சர்கார் கதைக்கருவும் ஒன்றுதான் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories