சினிமா

நேர்கொண்ட பார்வை: “அஜித் இந்த படத்தில் நடித்திருப்பது காலத்தின் தேவை” - ஒரு போலீஸ் அதிகாரியின் பார்வை !

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் தொடர்பாக திருநெல்வேலி காவல்துறை துணை ஆணையர் அர்ஜூன் சரவணனின் முகநூல் பதிவு வைரலாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை:  “அஜித் இந்த படத்தில் நடித்திருப்பது காலத்தின் தேவை” - ஒரு போலீஸ் அதிகாரியின் பார்வை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமிதாப் பச்சன், டாப்சி நடிப்பில் இந்தியில் வெளியாகி சக்கப்போடு போட்ட பிங்க் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கில் அஜித், வித்யாபாலன், ஷரத்தா ஸ்ரீநாத் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை.

கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி வெளியான இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்திருக்கிறார்.

படம் வெளியான நாள் தொடங்கி அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பினர் நேர்கொண்ட பார்வை படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை போன்ற வெற்றி படங்களை கொடுத்த எச்.வினோத்தின் இயக்கத்தாலும், அஜித்தின் நடிப்பாலும் படத்தின் தரம் மேம்பட்டுள்ளது எனவும் பேசி வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வை:  “அஜித் இந்த படத்தில் நடித்திருப்பது காலத்தின் தேவை” - ஒரு போலீஸ் அதிகாரியின் பார்வை !

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் பேசும் No Means No என்ற வசனம் வெகுவாகவே திரைத்துறை மட்டுமல்லாமல், அனைவரையும் கவர்ந்ததுள்ளது. சமுதாய விழிப்புணர்வுக்கு வித்திடும் வகையில் இந்த அமைந்துள்ளது. முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் அஜித்தையும் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், திருநெல்வேலி காவல்துறை துணை ஆணையர் அர்ஜீன் சரவணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேர்கொண்ட பார்வை படம் குறித்து கருத்து பதிவிட்டிருக்கிறார். அதில், “அனைத்து துறைகளிலும் மிக வேகமாக முன்னேறி வரும் பெண்கள், தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை சட்டத்தின் துணையுடன் எவ்வாறு எதிர்கொள்வது என்பதை நன்கு விளக்கி, திரைப்படத்தை பார்க்கும் அனைவருக்கும் பல புதிய கருத்துகளை புகுத்தியுள்ளது என அவரது கருத்து நீள்கிறது”.

“பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் உறுதிசெய்யும் வகையில் தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என குறிப்பிட்டு, அதற்கான பட்டியலையும் இணைத்து பதிவிட்டிருக்கிறார் அர்ஜூன் சரவணன்”.

“இறுதியாக பெண் குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதை விட, ஆண் குழந்தைகள் அவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று சொல்லி வளர்ப்பதே தற்போதைய தேவை என்றும், நேர்கொண்டபார்வை இக்காலத்துக்கு தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்”.

இவரது பதிவு தற்போது பலரால் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. மேலும், இதற்கு முன்பு வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் தலைக்கவசம் அணிந்து பைக் ஓட்டியது தொடர்பாகவும் அர்ஜூன் சரவணன் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories