சினிமா

தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்; கே.ஜி.எஃப் படத்திற்காக 2 தமிழர்களுக்கு விருது

2018ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டது.

தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்; கே.ஜி.எஃப் படத்திற்காக 2 தமிழர்களுக்கு விருது
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத் துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு மே மாதத்தில் குடியரசு தலைவரால் விருதுகள் வழங்கப்படும். நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இந்த ஆண்டு விருது அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், 66 வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டது.

தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்; கே.ஜி.எஃப் படத்திற்காக 2 தமிழர்களுக்கு விருது

சிறந்த நடிகர் - ஆயுஷ்மான் குர்ரானா, விக்கி கௌசல்

2018ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருது இருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் குர்ரானா (அந்தாதுன்) மற்றும் விக்கி கௌசல் (உரி) ஆகிய இருவருக்கும் அறிவிப்பு.

தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்; கே.ஜி.எஃப் படத்திற்காக 2 தமிழர்களுக்கு விருது

சிறந்த நடிகை - கீர்த்தி சுரேஷ் (மகாநதி)

2018ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசிய விருது மகாநதி படத்தில் சிறப்பாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு வழங்கப்பட்டுள்ளது, இந்திய்.

தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்; கே.ஜி.எஃப் படத்திற்காக 2 தமிழர்களுக்கு விருது

சிறந்த இயக்குனர் - ஆதித்யா தத் (உரி)

சிறந்த இயக்குனருக்கான விருது ஹிந்தியில், இந்திய ராணுவத்தின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை மையப்படுத்தி வெளியான உரி படத்தை இயக்கிய ஆதித்யா தத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பின்னணி இசை - உரி

சர்ஜிகல் தாக்குதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ’உரி’ திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது கிடைத்துள்ளது.

தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்; கே.ஜி.எஃப் படத்திற்காக 2 தமிழர்களுக்கு விருது

சிறந்த இசையமைப்பாளர் - சஞ்சய் லீலா பன்சாலி

’பத்மாவத்’ படத்திற்காக சஞ்சய் லீலா பன்சாலிக்கு சிறந்த இசையமைப்பாளருக்கன தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்; கே.ஜி.எஃப் படத்திற்காக 2 தமிழர்களுக்கு விருது

சிறந்த தமிழ்ப் படம் - பாரம்

சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது ப்ரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளியான பாரம் படத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது

தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்; கே.ஜி.எஃப் படத்திற்காக 2 தமிழர்களுக்கு விருது

சிறந்த தெலுங்கு மொழிப் படம் - மகாநதி

சிறந்த தெலுங்கு மொழி படமாக, பழம்பெரும் நடிகை சாவித்திரியாக, கீர்த்தி சுரேஷ் நடித்த ’மகாநதி’ திரைபப்டத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்; கே.ஜி.எஃப் படத்திற்காக 2 தமிழர்களுக்கு விருது

சிறந்த ஹிந்தி மொழி படம் - அந்தாதுன்

ஹிந்தி மொழியின் சிறந்த படத்திற்கான தேசிய விருது, ஸ்ரீராம் ராகவன் இயக்கிய ‘அந்தாதுன்’ படத்திற்கு அறிவிப்பு.

சிறந்த மலையாளப் படம் - சுடானி ஃப்ரம் நைஜீரியா

சிறந்த ஆடை வடிவமைப்பு - மகாநதி

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருது மகாநதி படத்திற்கு அறிவிப்பு

தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்; கே.ஜி.எஃப் படத்திற்காக 2 தமிழர்களுக்கு விருது

சிறந்த நடன அமைப்பு - பத்மாவதி

சிறந்த நடன அமைப்புக்கான தேசிய விருது பத்மாவதி படத்தில் இடம்பெற்ற ’கூமர்’ பாடலுக்கு அறிவிப்பு

தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்; கே.ஜி.எஃப் படத்திற்காக 2 தமிழர்களுக்கு விருது

சிறந்த சண்டை இயக்கம் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்சுக்கான தேசிய விருது ’கே.ஜி.எஃப்’ திரைப்படத்திற்கு அறிவிப்பு. கே.ஜி.எப் படத்திற்கு தமிழகத்தை சேர்ந்த ’அன்பறிவ்’ என்ற இரட்டையர்கள் சண்டைக்கு காட்சியை வடிவமைத்தனர்.

மேலும், சிறந்த விழிப்புணர்வு படமாக பேட்மேன் படம் அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படம் எடுக்க உகந்த மாநிலம் உத்தராகண்ட் மாநிலம் என தேர்வு செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories