சினிமா

சன்னி லியோன் சொன்ன நம்பரால் டெல்லி இளைஞருக்கு ஏற்பட்ட வேதனை!

சன்னி லியோன் என நினைத்து நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் வந்ததால் காவல் நிலையத்தை நாடிய டெல்லி இளைஞர்.

சன்னி லியோன் சொன்ன நம்பரால் டெல்லி இளைஞருக்கு ஏற்பட்ட வேதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாலிவுட் நடிகை சன்னி லியோன் கூறிய போன் நம்பரால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் டெல்லியைச் சேர்ந்த இளைஞர்.

இந்தி திரையுலகின் பிரபல நடிகைகளுள் ஒருவரான சன்னி லியோனுக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பாலிவுட் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிலும் ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய சன்னி லியோன், ‘வீரமாதேவி’ என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

கடந்த ஜூலை 26ம் தேதி இந்தி திரையுலகில் ரிலீசான படம் ‘அர்ஜூர் பாட்டியாலா’. இந்தப் படத்தில் கீர்த்தி சனோன், வருன் ஷர்மா, தில்ஜித் உடன் சன்னி லியோனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சன்னி லியோன் சொன்ன நம்பரால் டெல்லி இளைஞருக்கு ஏற்பட்ட வேதனை!

படத்தில் வரும் ஒரு காட்சியில் சன்னி லியோன் ஒரு ஃபோன் நம்பரை சொல்லி நடித்திருக்கிறார். இதனை அவரது ரசிகர்கள் தவறாக புரிந்துக்கொண்டு சன்னி லியோன் கூறிய மொபைல் எண்ணுக்கு தொடர்ந்து அழைத்துள்ளனர்.

அந்த எண்ணை உபயோகித்து வரும் டெல்லி பிதாம்புரா பகுதியைச் சேர்ந்த புனீத் அகர்வால் என்ற இளைஞருக்கு நூற்றுக்கணக்கான அழைப்புகள் வந்ததால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தை நாடிய அந்த இளைஞர், மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கு வரும் அழைப்புகளை முதலில் பிராங்க் என நினைத்துக் கொண்டதாகவும் பின்னர் தான் ‘அர்ஜூர் பாட்டியாலா’ படத்தில் சன்னி லியோன் வரும் காட்சியில் எனது போன் நம்பர் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனக்கு வரும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் பலர் என்னை சன்னி லியோன் என நினைத்து தகாத முறையில் பேசி வருகின்றனர். இது தொடர்பாக போலீசிடம் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories