சினிமா

லீக் ஆன விஜய் ‘பிகில்’ பட பாடல் : அதிகாரப்பூர்வமாக ஜூலை 23ல் வெளியாகிறது - படக்குழு அறிவிப்பு

விஜயின் பிகில் பட முதல் பாடல் வெளியீடு தொடர்பாக ட்விட்டரில் அறிவித்தது தயாரிப்பு குழு. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

லீக் ஆன விஜய் ‘பிகில்’ பட பாடல் : அதிகாரப்பூர்வமாக ஜூலை 23ல் வெளியாகிறது - படக்குழு அறிவிப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘பிகில்’. மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணியில் ‘மெர்சல்’ படத்தை அடுத்து பிகில் படத்திலும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்துள்ளார்.

நயன்தாரா, விவேக், இந்துஜா என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கும் வெளியாகும் என ஏற்கெனவே தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். அறிவித்திருந்தது.

இந்நிலையில், ‘பிகில்’ படத்தின் ஒவ்வொரு அப்டேட்களும் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்தது. விஜயின் பிறந்த நாளுக்கு வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டிருக்கும் பிகில் படத்தின் ‘சிங்கப் பெண்ணே..’ என்ற பாடல் இணையத்தில் கசிந்தது. இதனால் ஒட்டுமொத்த படக்குழுவும் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளானது.

இதனையடுத்து, ‘சிங்கப் பெண்ணே...’ பாடல் வருகிற ஜூலை 23ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது என படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் அறிவித்து அதற்கான புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த பாடல் அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் மூன்றாவது பாடலான ‘தீ முகம்தான்’ பாடல் இன்று வெளியாகி உள்ள நிலையில், விஜயின் ‘பிகில்’ படத்தின் பாடல் வெளியாவது குறித்த அறிவிப்பு வெளியானது அஜித்-விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதேநேரம், சிங்கப்பெண்ணே ஹேஷ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முன்னிலையில் உள்ளது.

banner

Related Stories

Related Stories