சினிமா

சினி அப்டேட்ஸ் 5 : கதை நாயகியாக தமன்னா... சூதுகவ்வும் பார்ட் 2..!

‘பெட்ரோமாக்ஸ்’ எனும் ஹாரர் கலந்த காமெடி படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் சோலோ நாயகியாக தமன்னா நடிக்கிறார்.

சினி அப்டேட்ஸ் 5 : கதை நாயகியாக தமன்னா... சூதுகவ்வும் பார்ட் 2..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1. மணிரத்னத்தின் அடுத்த படம் துவக்கம்!

மல்டி ஸ்டாரர் காமினேஷனில் வெளியாகி ஹிட்டான செக்கச் சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து, மணிரத்னம், அவரின் கனவுப் படமான பொன்னியின் செல்வனை இயக்குவதிலேயே கவனம் செலுத்திவந்தார். நடுவில், அவரின் உதவி இயக்குநர் தனாவுக்காக ஒரு படத்துக்கு கதை, வசனம் எழுத முன்வந்தார்.

சினி அப்டேட்ஸ் 5 : கதை நாயகியாக தமன்னா... சூதுகவ்வும் பார்ட் 2..!

விக்ரம் பிரபு லீட் ரோலில் நடிக்கும் அந்தப் படத்தில் நாயகியாக மடோனா செபாஸ்டியன் ஒப்பந்தமானார். வானம் கொட்டட்டும் என டைட்டில் அறிவிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. அதை மணிரத்னம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

2. நயன்தாராவின் அடுத்த ரிலீஸ்!

இரட்டை வேடத்தில் நயன்தாரா நடித்த ‘ஐரா’ சமீபத்தில் வெளியானது. அடுத்ததாக, ஹாரர் படமான கொலையுதிர் காலம் ரிலீஸூக்கு தயாராகியுள்ளது. சென்சாருக்கு அனுப்பப்பட்ட இப்படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் கொடுத்து ரிலீஸூக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது சென்சார் அமைப்பு.

சினி அப்டேட்ஸ் 5 : கதை நாயகியாக தமன்னா... சூதுகவ்வும் பார்ட் 2..!

வருகிற ஜூலை 26ம் தேதி கொலையுதிர் காலம் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. பிரபல இயக்குநர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் பல்வேறு பிரச்னைகளால் சிக்கி ரிலீஸாக முடியாமல் சிக்கித்திணறி, இறுதியில் அடுத்த வாரம் ரிலீஸுக்கு வந்திருக்கிறது.

3. சோலோ நாயகியாக தமன்னா நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’

2017ஆம் ஆண்டு ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் கலையரசன், ஜனனி, ஷிவதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அதே கண்கள். இந்தப் படத்துக்கு கிடைத்த வரவெற்பை தொடர்ந்து, ரோஹின் வெங்கடேசன் இயக்கவிருக்கும் அடுத்த படம் பெட்ரோமாக்ஸ்.

சினி அப்டேட்ஸ் 5 : கதை நாயகியாக தமன்னா... சூதுகவ்வும் பார்ட் 2..!

ஹாரர் கலந்த காமெடி படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் சோலோ நாயகியாக தமன்னா நடிக்கிறார். முதன்முறையாக நாயகி மையமான கதைக்களத்தில் நடிக்கிறார் தமன்னா. இப்படத்துக்கான போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஜனரஞ்சக எழுத்தாளர் ஜி.ஆர்.சுரேந்தர்நாத் வசனம் எழுதுகிறார். இது, தெலுங்கில் டாப்சி நடித்து வெளியான ‘அனண்டோ ப்ரம்மா’ படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

4. விரைவில் சூதுகவ்வும் 2

அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். சமீபத்தில் மாயவன், கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் படங்களின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். இவரின் வெற்றிப் படங்களில் மிக முக்கியமானது சூதுகவ்வும். வெளியான நேரத்தில் டிரெண்ட் செட்டிங் திரைப்படமாகவே பார்க்கப்பட்டது.

சினி அப்டேட்ஸ் 5 : கதை நாயகியாக தமன்னா... சூதுகவ்வும் பார்ட் 2..!

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பணியில் இறங்கியிருக்கிறார் சி.வி.குமார். முதல் பாகத்தை இயக்கிய நலன் குமாரசாமி தான், இதற்கும் இயக்குநர். ஆனால், நடிகர்கள் மட்டும் மாறலாம் என்று சொல்லப்படுகிறது. விரைவிலேயே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. எப்படியோ, மீண்டும் ஒரு டார்க் காமெடி படத்துக்கு ரசிகர்கள் தயாராகலாம்.

5. இட் சாப்டர் 2 டிரெய்லர் ரிலீஸ்

1989ல் பிரபல ஆங்கில எழுத்தாளர் ஸ்டீஃபன் கிங் எழுதிய நாவலை தழுவி, 2017ல் எடுக்கப்பட்ட படம் இட். ஆன்டி மஸ்சீட்டி இயக்கத்தில் வெளியான இப்படத்துக்கு உலகமெங்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

சினி அப்டேட்ஸ் 5 : கதை நாயகியாக தமன்னா... சூதுகவ்வும் பார்ட் 2..!

ஏற்கெனவே டீஸர் வெளியாகி மிரட்டிய நிலையில், படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 6ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகம் போலவே, இந்தப் பாகமும் மிரட்டுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

banner

Related Stories

Related Stories