சினிமா

சினி அப்டேட்ஸ் 5 : சிவா இயக்கத்தில் ரஜினி..? சிவகார்த்திகேயனின் அடுத்த படம்?

நேர்கொண்ட பார்வை, டியர் காம்ரேட், மிஷன் மங்கள் உள்ளிட்ட படங்கள் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்ஸ்...

சினி அப்டேட்ஸ் 5 : சிவா இயக்கத்தில் ரஜினி..? சிவகார்த்திகேயனின் அடுத்த படம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1. ‘நேர்கொண்ட பார்வை’ - சென்சார் தகவல்!

அஜித், வித்யா பாலன் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெளியான ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, படத்தை ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியிட இருக்கிறது படக்குழு.

சினி அப்டேட்ஸ் 5 : சிவா இயக்கத்தில் ரஜினி..? சிவகார்த்திகேயனின் அடுத்த படம்?

படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துவருகிறார். ஏற்கெனவே, அஜித்துக்கு பில்லா, பில்லா2, ஆரம்பம், மங்காத்தா படங்களுக்கு அசத்தலான பின்னணி இசையை யுவன் தந்திருப்பதால், இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. பரபரப்பான போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தற்போது நடந்துவருகிறது. இந்நிலையில் படத்துக்கு சென்சார் குழுவினர் யு/ஏ சான்று அளித்து ரிலீஸூக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளனர்.

2. மிஷன் மங்கள் படத்தின் ட்ரைலர் வெளியானது!

Mars Orbiter Mission-னுக்காக இஸ்ரோ செய்த பங்களிப்பை மையமாக வைத்து பாலிவுட்டில் உருவாகிவரும் படம் `மிஷன் மங்கள்’. அக்‌ஷய் குமார், வித்யாபாலன், சோனாக்‌ஷி, டாப்ஸி, நித்யா மேனன், க்ரிதி குல்ஹரி என பலரும் நடித்துவரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து பணியாற்றிய ஜெகன் சக்தி இயக்கிவருகிறார்.

கடந்த வாரம் படத்தின் டீஸர் வெளியாகி பரபரப்பான நிலையில், தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. சுதந்திர தினமான ஆக்ஸ்ட் 15ஆம் தேதி படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

3. சூர்யாவை தொடர்ந்து ரஜினியை இயக்கும் சிவா?

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து அஜித்தை வைத்து நான்கு படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் சிவா. தற்போது, சூர்யாவுக்கான பட வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். சூர்யாவைத் தொடர்ந்து ரஜினியை இயக்குவார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தர்பார் படப்பிடிப்பு இடைவேளையின் போது இயக்குநர் சிவாவை அழைத்து கதை கேட்டிருந்தார் ரஜினி. அந்தக் கதை பிடித்துப் போக, உடனே சம்மதம் சொல்லியிருக்கிறார் ரஜினி.

சினி அப்டேட்ஸ் 5 : சிவா இயக்கத்தில் ரஜினி..? சிவகார்த்திகேயனின் அடுத்த படம்?

தர்பார் பட ஷூட்டிங் முடிவதற்கும், சிவாவும் சூர்யா படத்தை முடிப்பதற்கும் சரியாக இருக்கும். இவ்விரு படங்களும் முடிந்தபிறகு ரஜினியை சிவா இயக்குவார் என்கிற தகவல் தற்போது உறுதியாகியுள்ளது. ரஜினிக்கான திரைக்கதை உருவாக்கும் பணியையும் கவனித்து வருகிறாராம் சிவா.

4. கோலமாவு கோகிலா இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்!

இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்து பாண்டியராஜ், ரவிகுமார், விக்னேஷ் சிவன் படங்களுக்கும் தேதி ஒதுக்கியிருக்கிறார். இந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கும் இயக்குநர் நெல்சன்.

சினி அப்டேட்ஸ் 5 : சிவா இயக்கத்தில் ரஜினி..? சிவகார்த்திகேயனின் அடுத்த படம்?

நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் தான் நெல்சன் திலீப்குமார். தொலைக்காட்சியில் பணிபுரியும் சமயத்தில் நெல்சனும் சிவகார்த்திகேயனும் நல்ல நண்பர்கள். அந்த நட்பின் வெளிப்பாடாக சிவா - நெல்சன் கூட்டணி இப்போழுது இணைந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

5. டியர் காம்ரெட் படத்தில் விஜய் சேதுபதி பாடிய பாடல்!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் நான்கு மொழிகளில் ரிலீஸூக்கு தயாராகிவரும் படம் ‘டியர் காம்ரேட்’. நாயகியா ராஷ்மிகா நடித்திருக்கும் இப்படத்தை பரத் கம்மா இயக்கிவருகிறார். ஏற்கெனவே படத்தின் டீஸர், டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலானது.

சினி அப்டேட்ஸ் 5 : சிவா இயக்கத்தில் ரஜினி..? சிவகார்த்திகேயனின் அடுத்த படம்?

டியர் காம்ரேட் திரைப்படம் ஜூலை 26ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்துக்கான Anthem ஒன்றை வெளியிட்டிருக்கிறது படக்குழு. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த Anthem பாடலில் தமிழ் வெர்ஷனை விஜய்சேதுபதியும், மலையாள வெர்ஷனை துல்கர் சல்மானும், தெலுங்கு வெர்ஷனை விஜய் தேவரகொண்டாவும் பாடியுள்ளனர். இதில் விஜய்சேதுபதி பாடியிருக்கும் வெர்ஷன் இங்கு வைரலாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories