சினிமா

அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்சி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பிங்க் படத்தின் ரீமேக் நேர்கொண்ட பார்வை. இதில், அமிதாப் கதாபாத்திரத்தில் அஜித்தும், டாப்சி கேரக்டரில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடித்துள்ளனர்.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மேலும், வித்யாபாலன், அபிராமி, டெல்லி கணேஷ், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்த மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக், ட்ரெய்லர் என இதுவரை வந்த அப்டேட்கள் ஒவ்வொன்றையும் சமூக வலைதளத்தில் அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் முக்கியமான அறிவிப்பு வெளியாக உள்ளது என புது போஸ்டர் ஒன்றுடன் பதிவிட்டிருந்தார்.

இதனை அடுத்து, படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி ரிலீசாக உள்ளது என போனி கபூர் அறிவித்துள்ளார்.

முன்னதாக ஆகஸ்ட் 10ம் தேதி படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ரிலீஸாகவுள்ளதால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories