சினிமா

“5 மணிநேரம் தான் நடிப்பேன்.. சண்டே லீவ்” : ஸ்கூல் குழந்தை போல அடம்பிடிக்கும் சிம்பு !

சிம்புவின் செயல்பாடுகள் ‘மாநாடு’ திரைப்படத் தயாரிப்பாளருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

“5 மணிநேரம் தான் நடிப்பேன்.. சண்டே லீவ்” : ஸ்கூல் குழந்தை போல அடம்பிடிக்கும் சிம்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு, தொடர்ந்து சரியான படங்களை தேர்வு செய்து நடிக்காததால் தோல்வியைச் சந்தித்து வருகிறார். நடிப்பு மட்டுமல்லாமல் இசை, டான்ஸ் என சினிமாவின் வேறு துறைகளிலும் திறமை பெற்றவர் சிம்பு.

சிம்புவின் திறமைகளை எல்லாம் அவரது செயல்பாடுகளே பின்னுக்குத் தள்ளிவிடுகின்றன. அவரது சர்ச்சை பேச்சுகளும், நடிப்பில் ஒழுங்கில்லாத செயல்பாடும் திரையுலகில் அவர் மீது கரும்புள்ளி ஏற்படக் காரணமாக அமைந்தன.

ஃபிட்னெஸ்ஸில் அக்கறை காட்டாததால் தாறுமாறாக எடை அதிகரித்தைத் தொடர்ந்து பலத்த விமர்சனங்களைச் சம்பாதித்த அவர் வம்படியாக ஜிம்முக்கு சென்று உடல் எடையைக் கணிசமாகக் குறைத்தார். இதனால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பிறகு, வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் கமிட் ஆனார் சிம்பு. இந்தப் படம் சிம்புவுக்கு நல்லதொரு கம்பேக் படமாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால், திடீரென ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

’மாநாடு’ படத்தின் ஷூட்டிங்குக்கு சிம்பு வருவார் எனக் காத்திருந்தனர். “வருகிறேன்... வருகிறேன்” எனக் கூறி வந்த சிம்பு, தற்போது “தினமும் 5 மணி நேரம் மட்டும்தான் நடிப்பேன். ஞாயிறு கட்டாயம் ஷூட்டிங்கில் விடுமுறை வேண்டும்” என கண்டிஷன் போடுகிறாராம்.

சிம்புவின் இத்தகைய செயல்பாடுகள் தயாரிப்பாளருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி நடிகராக இருப்பவர் சினிமாவின் கஷ்ட நஷ்டங்களை புரிந்துகொள்ளவேண்டாமா என வெளிப்படையாகவே புலம்பி வருகிறாராம்.

banner

Related Stories

Related Stories