சினிமா

பிரபல நகைச்சுவை நாடக நடிகர் கிரேஸி மோகன் உடல் நல குறைவால் காலமானார் !

பிரபல நகைச்சுவை நாடக நடிகர் கிரேஸி மோகன் உடல் நல குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மதியம் 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

பிரபல நகைச்சுவை நாடக நடிகர் கிரேஸி மோகன் உடல் நல குறைவால் காலமானார் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

பிரபல தமிழ் நாடக மற்றும் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் (66). கிரேஸி மோகன் கமல்ஹாசன் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றினார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மதியம் 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுவரை கிரேஸி மோகன் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

banner

Related Stories

Related Stories