சினிமா

அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் ‘ஜாக்பாட்’ நாயகி ஜோதிகா!

நடிகர் சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் ‘ஜாக்பாட்’ நாயகி ஜோதிகா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருமணத்திற்கு பிறகு ஒரு நீண்ட இடைவேளைக்கு பின் நடிகை ஜோதிகா நடிப்பில் 36 வயதினிலே வெளியானது. அதன் பின்னர் மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச்சிவந்த வானம், காற்றின் மொழி பல படங்களில் நடித்திருந்தார் ஜோதிகா.

தற்போது புதுமுக இயக்குநர் ராஜ் இயக்கத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் ஜோதிகா. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.

இதில், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு அன்பான டீச்சராக ஜோதிகாவின் கதாப்பாத்திரம் அமைந்திருக்கிறது. ஏற்கெனவே கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி சக்கப்போடு போட்ட காக்க காக்க படத்தில் இதே மாதிரியான ஆசிரியர் கதாப்பாத்திரத்தில் ஜோதிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியிடப்பட உள்ளது.

இதனையடுத்து, பிரபுதேவா நடிப்பில் வெளியான குலேபகாவலி படத்தின் இயக்குநர் கல்யான் இயக்கத்தில், நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகை ஜோதிகா நடித்து வந்தார். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

‘ஜாக்பாட்’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும் தயாரிப்பாளருமான் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஜாக்பாட் படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து மெளனராகம் ரேவதியும் நடித்துள்ளார்.

ஜாக்பாட் படம் முழுக்க முழுக்க கமர்சியல் திரைக்கதையை மையமாக கொண்டுள்ளது என நடிகர் சூர்யா ட்விட்டரில் குறிப்பிட்டது ரசிகர்கள் மத்தியில் ஆவலை அதிகரித்துள்ளது. மேலும், ஜாக்பாட் படத்தில் யோகிபாபு, மன்சூர் அலிகான், ஆனந்த் ராஜ் ஆகிய பலர் நடித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories