சினிமா

யூடியூப்பில் ரிலீசானது சூர்யாவின் ‘NGK’ பாடல்கள்!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள என்.ஜி.கே. படத்தின் அனைத்து பாடல்கள் சமூக வலைதளமான யூடியூப்பில் இன்று வெளியானது.

யூடியூப்பில் ரிலீசானது சூர்யாவின் ‘NGK’ பாடல்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செல்வராகவன், சூர்யா கூட்டணியில் முதல் முறையாக உருவாகியுள்ள படம் என்.ஜி.கே. (நந்த கோபாலன் குமரன்) முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளனர்.

என்.ஜி.கே. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்திற்கான ஒவ்வொரு அப்டேட்டிற்காக செல்வராகவனின் ரசிகர்களும், சூர்யாவின் ரசிகர்களும் ட்விட்டரில் போராடிய காலங்களும் உண்டு.

யூடியூப்பில் ரிலீசானது சூர்யாவின் ‘NGK’ பாடல்கள்!

அவ்வகையில், ஏப்.,29 அன்று என்.ஜி.கேவின் டிரெய்லரும் பாடல்களும் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. அதேபோல், நேற்று மாலை 7 மணி அளவில் படத்தின் டிரெய்லர் வெளிவந்தது. இது ரசிகர்களிடையே ஏக போக வரவேற்பை பெற்று தந்துள்ளது.

இந்நிலையில், படத்தின் அனைத்து பாடல்களும் சமூக வலைதளமான யூடியூப்பில் சோனி மியூசிக் பக்கத்தில் வெளிவந்துள்ளது. மொத்தம் 4 பாடல்களை கொண்டுள்ளது என்.ஜி.கே.

banner

Related Stories

Related Stories