சினிமா

சிம்பு, கெளதம் கார்த்திக் இணையும் புதிய படம்...! இது ‘சிம்பு 45’ அப்டேட்

சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படத்தில் கெளதம் கார்த்திக் முக்கிய ரோலில் நடிக்கிறார். 

சிம்பு 
சிம்பு 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்த வருடம் சிம்புவுக்கு வெளியான படம் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’. இப்படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் ‘மாநாடு’ படம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. ஏனெனில், உடல் எடை குறைக்க, வெளிநாட்டுக்கு சென்றிருக்கிறார் சிம்பு. அவர் சென்னை திரும்பியதும் ‘மாநாடு’ ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

சமீபத்தில் ஹன்சிகா நடித்துவரும் ‘மகா’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார் சிம்பு.

சிம்பு 
சிம்பு 

அடுத்தக் கட்டமாக சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படம் ஒன்று குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கன்னட இயக்குநர் நார்தன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தில் சிம்புவுடன் கெளதம் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இது சிம்புவின் 45வது படம்.

ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாக இருக்கும் இப்படத்துக்கு மதன்கார்க்கி வசனம் எழுதுகிறார். இதில் சிம்பு நிழலுலக ரவுடியாகவும், கெளதம் கார்த்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறாராம். கன்னடத்தில் வெளியன முஃப்தி படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது.

banner

Related Stories

Related Stories