சினிமா

ஜோதிகா நடித்து வரும் புதிய படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் நடிகர் சூர்யா...

ஜோதிகா நடித்து வரும் புதிய படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது...

Surya with jothika team
Surya with jothika team
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு ரீ-எண்ட்ரி கொடுத்த நாயகி ஜோதிகா தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியதுவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இறுதியாக அவரின் நடிப்பில் வெளியான ‘செக்க சிவந்த வானம்’, ‘காற்றின் மொழி’ போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

pooja still
pooja still
moviegalleri.net

தற்போது ஜோதிகா,’ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதற்கிடையே கணவர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்கு ஒரு படம் நடிக்க ஒப்பந்தமான ஜோதிகா 35 நாட்களில் அந்த படத்தின் ஷூட்டிங் வேலைகளை முடித்துக் கொடுத்திருக்கிறார்.

Shooting wrap
Shooting wrap

ஜோதிகாவுடன் சேர்ந்து ரேவதி நடித்திருந்த இந்த படமும் பெண்கள் முன்னேற்றதை மையப்படுத்திய படமாக உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த படத்திற்கான ஷூட்டிங் வேலைகள் முடிவடைவதை ஒட்டி இறுதிநாள் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சூர்யா இயக்குனருக்கும் படக்குழுவுக்கும் நன்றி கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories