சினிமா

“சிம்புவுக்கு விரைவில் டும் டும் டும்” - டி.ராஜேந்தர் சூசகம்

நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். அவருடன் நடித்த பெண்ணை விட பிடித்த பெண்ணை அவர் மண முடிப்பார்.

“சிம்புவுக்கு விரைவில் டும் டும் டும்” - டி.ராஜேந்தர் சூசகம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் தனது இளைய மகன் குறளரசனின் திருமண விழாவிற்கு அழைப்பு விடுப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இச்சந்திப்பில் தி.மு.க.வின் எம்.பி. கனிமொழி உடனிருந்தார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுடன் டி.ராஜேந்தர், குறளரசன்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுடன் டி.ராஜேந்தர், குறளரசன்

பின்னர் பேட்டியளித்த டி.ராஜேந்தர்,

வருகின்ற ஏப்ரல் 29ல் நடைபெற இருக்கும் என்னுடைய இளைய மகன் குறளரசனின் திருமணத்திற்கு அழைப்பு விடுப்பதற்காக மரியாதை நிமித்தமாக தளபதி மு.க.ஸ்டாலினை சந்தித்தேன்.

இதற்கு முன்பு என் மகள் இலக்கியாவின் திருமணத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தேன். அப்போது, தலைவர் கலைஞரும், தளபதி ஸ்டாலின் பங்கேற்றிருந்தார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் எனக்கு தாய் கழகம். நான் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவன் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், எனது மூத்த மகன் சிம்பு (எஸ்.டி.ஆர்) ஒரு முடிவெடுத்திருக்கிறார். அவருடன் நடித்த பெண்ணை விட அவருக்கு பிடித்த பெண்ணை மணமுடிக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார். ஆகவே சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories