
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘காப்பான்’. இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
நேற்று முன்தினம், சூர்யாவின் என்.ஜி.கே படத்திலிருந்து தண்டல்காரன் பாடல் ரிலீசானது. மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.
இந்நிலையில் இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.








