சினிமா

புதிய சாதனை படைத்திருக்கும் தனுஷின் ரவுடி பேபி பாடல்

பாலஜி மோகன் இயக்கதில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 திரைப்படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல், தென்னிந்தியாவிலேயே அதிக பார்வையாளர்களைக் கொண்ட முதல் பாடல் என்ற பெருமையை பெற்றது.

rowdy baby from maari 2
twitter rowdy baby from maari 2
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

இயக்குநர் பாலஜி மோகன் இயக்கதில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானது மாரி 2 திரைப்படம். இப்படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல், தென்னிந்தியாவிலேயே அதிக பார்வையாளர்களைக் கொண்ட முதல் பாடல் என்ற பெருமையை பெற்றது.

இந்த நிலையில் யூடியூபில் வெளியிடப்பட்ட அந்த பாடலை இதுவரை 30 கோடி பேர் பார்த்துள்ளதாக தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, டோவினோ தாமஸ், வித்யா பிரதீப், கிருஷ்ணா,வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ சங்கர் நடித்திருந்தனர்.இதற்குமுன் தென்னிந்திய அளவில் அதிக பார்வையாளர்களை பெற்ற பாடலாக ஒய் திஸ் கொலவெறி பாடல் இருந்தது. அதையுன் தனுஷ்தான் பாடி இருந்தார் அந்த பாடலுக்கு அனிருத் இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

banner

Related Stories

Related Stories