உலகம்
டிட்வா புயல் கொடூரம்: 123 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் மாயம்... இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிட்வா புயலாக உருமாறியது. இலங்கைக்கு மிக அருகில் நிலைகொண்ட இந்த புயல் காரணமாக இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் மிககனமழை பதிவானது. இதனால் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் பாதிக்கப்பட்டன.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது. அதே போல வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு மாயமான 100க்கும் அதிகமானோரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு துறைமுகத்தில் இருந்த இந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் INS விக்ராந்தில் இருந்து ஹெலிகாப்டர்களை அனுப்ப இலங்கை அரசின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி ஹெலிகாப்டர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மீட்புப்பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. அதே போல பரேஷன் சாகர்பந்து என்ற பெயரில் கூடாரங்கள், போர்வைகள், சுகாதார நலன் சார்ந்த பொருட்கள் மற்றும் உடனடியாக சாப்பிட கூடிய உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் இந்தியா சார்பில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
Also Read
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!
-
“அதிமுகவின் வாக்குறுதிகளுக்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்..” - பட்டியலிட்டு அமைச்சர் ரகுபதி தாக்கு!