உலகம்
இலங்கையை நாசமாக்கிய டிட்வா புயல்... 40 பேர் உயிரிழப்பு... ஏராளமானோர் காணாமல் போனதால் அதிர்ச்சி !
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிட்வா புயலாக உருமாறியது. இலங்கைக்கு மிக அருகில் நிலைகொண்ட இந்த புயல் காரணமாக இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் மிககனமழை பதிவானது. இதனால் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் பாதிக்கப்பட்டன.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 40 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் அறிவிப்பு. அதே போல வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு மாயமான 21 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு துறையில் தங்கி உள்ள இந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் INS விக்ராந்தில் இருந்து ஹெலிகாப்டர்களை அனுப்ப இலங்கை அரசின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கவும், அவசர உதவிகளை வழங்கவும் இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் கடுமையான அழிவுகளை ஏற்படுத்தியுள்ள டிட்வா புயல் அடுத்ததாக தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதால், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டின் சில மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையும், சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
மக்களுக்கு உதவிட தயார் நிலையில் இருக்கவும் : கழக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
டிட்வா புயல் : அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”கலையையும் கலைஞர்களையும் போற்ற வேண்டியது அரசினுடைய கடமை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
”பா.ஜ.க-வின் ஸ்லீப்பர் செல் செங்கோட்டையன்” : அமைச்சர் ரகுபதி விமர்சனம்!
-
ஜவுளி வியாபாரியிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த அ.தி.மு.க பிரமுகர்கள் : கைது செய்தது காவல்துறை!