உலகம்
உக்ரைனிடமிருந்து குர்ஸ்க் பிராந்தியத்தை முழுவதுமாக மீட்டதாக ரஷ்யா அறிவிப்பு: 76,000 உக்ரைன் வீரர்கள் பலி?
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது 3 வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இந்த போர் இத்தனை ஆண்டு கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
இதனிடையே கடந்த ஆண்டு உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஒரு எதிர்பாராத அதிரடி தாக்குதல் நடத்தி ரஷ்யாவுக்குள் நுழைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஷ்யாவின் படைகள் உக்ரைனின் டோனஸ்க் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஒரு அதிரடி தாக்குதல் நடத்தி அந்த பகுதியில் முன்னேறியது.
இந்த நிலையில், உக்ரைன் பிடியிலிருந்த ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தை முழுமையாக விடுவித்து, உக்ரைன் படைகளை விரட்டியடித்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து உக்ரைன் படையினா் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டுவிட்டனர் என்றும், இதனை ரஷ்ய முப்படைளின் தளபதி வேலரி கெராஸிமொவ் உறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குர்ஸ்க் பிராந்தியத்தை முழுமையாக மீட்டதற்காக தங்களது படையினருக்கு அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கூர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனுக்கு எதிரான போரில் வட கொரிய வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதை ரஷ்யா முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. கூர்ஸ்க் பிராந்தியத்தை மீட்பதில் வட கொரிய வீரர்கள் முக்கிய பங்காற்றியதாகவும் ரஷ்ய ராணும் பாராட்டு தெரிவித்துள்ளது. கூர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவிய உக்ரைன் ராணுவத்தைச் சேர்ந்த 76 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டை பின்பற்றும் கர்நாடகா... அரசு பேருந்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பயணம் !
-
6 மாவட்டங்களில் விளையாட்டுக்காக முக்கிய திட்டங்கள்.. அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர் - விவரம்!
-
தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார் பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!