உலகம்
"ரஷ்யாவுடனான போர் நிறுத்தத்துக்கு தயார்" - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அறிவிப்பு !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இதனால் ரஷ்யாவுக்குள்ளும் தற்போது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
எனினும் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும், உக்ரைனுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்தார். மேலும் சவுதி அரேபியாவில் உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தத்துக்கு வருமாறு அமெரிக்காவுக்கும் டிரம்ப் அழைப்பு விடுத்த நிலையில், விரைவில் அங்கு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், போர் நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாகவும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைனுக்கான ஆயுத உதவியை நிறுத்தவுள்ளதாக அமெரிக்கா அறிவித்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !