உலகம்
மெக்ஸிகோ, கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 % வரி : ஒத்திவைத்த டிரம்ப்... பின்னணி என்ன ?
மெக்ஸிகோ, கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 % வரி விதிக்கப்படும் நடவடிக்கையை 30 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளார் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவாக வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்து.
இதில் அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் பரப்புரையில்போதே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மெக்ஸிகோ, கனடா, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி அதிபரானதும் மெக்ஸிகோ, கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 % வரி விதித்து உத்தரவிட்டார். அதே போல சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10 % வரியும் விதித்து உத்தரவிட்டார். இதற்கு மெக்ஸிகோ, கனடா, சீனா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்ததோடு, இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் அறிவித்தது.
இந்த நிலையில், மெக்ஸிகோ, கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 % வரி விதிக்கப்படும் நடவடிக்கையை 30 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளார் டொனால்ட் டிரம்ப். மெக்ஸிகோ, கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அதிக வரி விதித்தால் அது அமெரிக்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து பணவீக்கத்தை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!