உலகம்

அமெரிக்க விமானங்கள் தரையிறக்க அனுமதி மறுப்பு... மெக்சிகோ, கொலம்பியா நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை !

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவாக வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்து.

இதில் அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்காவில் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.

அதேபோல பெற்றோர்களில் ஒருவர் அமெரிக்கராக இருந்தால் மட்டுமே பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதோடு மெக்சிகோவில் இருந்து அமெரிக்கா வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவர் என்றும் அறிவித்தார்.

அதன்படி மெக்சிகோ, கொலம்பியா ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை கைது செய்து அவர்களை நாடு கடத்த டிரம்ப் உத்தரவிட்டார். இவர்கள் விமானப்படை விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அந்த விமானங்களை தரையிறக்க மெக்சிகோ, கொலம்பியா அரசுகள் அனுமதி வழங்கவில்லை.

இதன் காரணமாக அந்த விமானங்கள் மீண்டும் அமெரிக்கா திரும்பின. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், மெக்சிகோ, கொலம்பியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்க உத்தரவிட்டுள்ளார். இது லத்தின் அமெரிக்க நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.