உலகம்
அழிக்கமுடியாது என கருதப்பட்ட அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா : அதிர்ச்சியில் நேட்டோ நாடுகள் !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
அந்த வகையில் நேட்டோ நாடுகள் அளித்த அமெரிக்க தயாரிப்பான F-16 போர் விமானத்தை ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் பயன்படுத்தி வந்தது. உக்ரைனின் தென்பகுதியில் அமைந்துள்ள சப்போரியா நகரில் ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலுக்கு உக்ரைன் F-16 போர் விமானத்தை பயன்படுத்தியது.
ஆனால் இந்த விமானத்தை ரஷ்யாவின் வான் பாதுகாப்பு மையம் தாக்கி அளித்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது. உலகின் அழிக்கமுடியாத சக்தி வாய்ந்த விமானமாக கருதப்பட்ட F-16 போர் விமானத்தை ரஷ்யா சுட்டுவீழ்த்தியுள்ளது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
1978-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விமானம் தற்போது பல்வேறு வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. சப்போரியா நகர சம்பவத்துக்கு முன்னர் இந்த விமானம் ஒரே ஒரு முறை மட்டுமே தாக்கி அளிக்கப்பட்டுள்ளது. F-16 விமானத்தின் மூலம் ஏமன் மீது சவுதி அரேபியா தாக்குதல் நடத்தியபோது இதே ரஷ்யாவின் வான் பாதுகாப்பு மையம் F-16 விமானத்தை தாக்கி அழித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
கருப்புக்கொடி போராட்டம் டிரெயிலர்தான் மெயின் பிக்சரை பார்க்க ஆசைப்பட கூடாது - CM MK Stalin எச்சரிக்கை!
-
தமிழ்நாட்டு மண் ஒருநாளும் பாஜகவின் ஆணவத் திமிருக்கு அடிபணியாது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
#Delimitation : தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
‘ரெஸ்ட்’ இல்லாமல் உழைக்கும் பெண்களுக்கு தரும் ‘ரெஸ்பெக்ட்’ உரிமைத்தொகை : சேலத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
”தொகுதி மறுவரையறை மசோதா.. வடக்கில் வென்று ஆட்சியை பிடிக்கலாம் என்ற நினைப்பு” : முரசொலி விமர்சனம்!