உலகம்
பதவி விலகும் முன் ஜோ பைடன் வழங்கிய உத்தரவு: கொதித்தெழுந்த ரஷ்யா... அணு ஆயுத கொள்கையை மாற்றியதால் அச்சம் !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. அதே நேரம் தொலைதூரம் தாக்கும் ஆயுதங்களை ரஷ்யாவுக்குள் பயன்படுத்த அமெரிக்கா தொடர்ந்து அனுமதி மறுத்து வந்தது.
இந்த நிலையில், ரஸ்யாவுக்குள் தொலைதூரம் தாக்கும் ஆயுதங்களை ரஷ்யாவுக்குள் பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்ற நிலையில், அவர் அதிபராக பதவியேற்கும் முன்னர் இந்த அனுமதியை ஜோ பைடன் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரம் ஜோ பைடனின் இந்த முடிவு பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அமெரிக்காவின் இந்த முடிவால் தனது அணுஆயுத கொள்கைகளின் மாற்றத்தை கொண்டுவர ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!