உலகம்
இலங்கையில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் : பெரும்பான்மை பெறுவாரா அதிபர் அநுர குமார திசநாயக்கே ?
இலங்கையின் எட்டாவது அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 38 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் அநுர குமார திசநாயக்கே இடதுசாரி கட்சியான மக்கள் விடுதலை முன்னணி கட்சி தலைமையின தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்டார்.
இலங்கை அதிபர் தேர்தல் முடிவடைந்த நிலையில், உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் யாருக்கும் 51 % வாக்குகள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் முதல் இரண்டு இடங்களை பிடித்த அநுர குமார திசநாயக்கே ,சஜித் பிரேமதாசா ஆகிய இருவரில் யார் அதிபர் வேட்பாளர் என்பதை அறிய இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
அதன் முடிவில் 55% வாக்குகளை பெற்று அநுர குமார திசநாயக்கே அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கையின் 9-வது அதிபராக அநுர குமார திசநாயக்கே பதவியேற்றுக்கொண்டார். நாடாளுமன்றத்தில் அநுர குமார திசநாயக்கேவின் தேசிய மக்கள் சக்திகூட்டணிக்கு 3 உறுப்பினர்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய சட்டங்களை நிறைவேற்ற முடியாமல்போகும் என்ற காரணத்தால் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக இலங்கையின் புதிய அதிபர் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அங்கு நாடாளுமன்ற தேர்தல் இன்று நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 இடங்களில் 196 இடங்களுக்கான பிரதிநிதிகள் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படும் நிலையில், அந்த தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்கேவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி, முன்னாள் பிரதமர் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி, மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனரா ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் தமிழர்கள் பகுதியில் வெற்றபெறும் தமிழ் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக முக்கிய கட்சிகள் வாக்குறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
மும்பையில் நடைபெறும் ‘உலக கடல்சார் உச்சி மாநாடு 2025!’ : தமிழ்நாடு அரசு பங்கேற்பு! - முழு விவரம் உள்ளே!
-
குளத்தில் குதித்த காதலன் : காப்பாற்ற முயன்ற காதலி - நடந்தது என்ன?
-
ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.5 லட்சம் கிடைக்கும் : பொதுமக்களிடம் பண மோசடி - அ.தி.மு.க நிர்வாகிகள் கைது!