உலகம்
ரஷ்ய எண்ணைய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல் : பற்றியெரிந்த கிரீமியா எண்ணெய் கிடங்கு !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இதனால் ரஷ்யாவுக்குள்ளும் தற்போது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஒரு எதிர்பாராத அதிரடி தாக்குதல் நடத்தி ரஷ்யாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் ரஷ்யாவின் ராணுவத்துக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் கிரிமியாவில் உள்ள முக்கியமான எண்ணைய் முனையத்தின் மீது உக்ரைன் கடுமையான தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
கிரிமியாவில் உள்ள ஃபியோடோசியா ஆலை அந்த பகுதியில் உள்ள மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையாக திகழ்ந்து வருகிறது. இந்த ஆலையின் மீது கடந்த மாா்ச் மாதமும் உக்ரைன் தாக்குதல் நடத்தியிருந்தது. ட்ரோன்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ள நிலையில், ஃபியோடோசியா ஆலை தீப்பிடித்தது உண்மைதான் என்று ரஷ்ய தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!