உலகம்
காசாவைத் தொடர்ந்து லெபனான் : இஸ்ரேலின் வான்வெளித் தாக்குதலில் 274 பேர் உயிரிழப்பு... ஐ.நா கண்டனம் !
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த தாக்குதலில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரினை அறிவித்ததும் ஹமாஸின் கூட்டாளியும், லெபனானில் செயல்படும் அமைப்புமான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலின் முக்கிய இலக்குகள் மீது ஹிஸ்புல்லாவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
சில நாட்களுக்கு முன்னர் ஹிஸ்புல்லா உள்ளிட்ட லெபனான் நாட்டில் ஆயுதக் குழுவினர் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஹிஸ்புல்லா குற்றம் சாட்டியது.
அதனைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய படை தளபதி இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதோடு இஸ்ரேலுடன் இனி நேருக்கு நேர் போரிட முடிவு செய்துள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்தது
இந்த நிலையில், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 21 குழந்தைகள், 39 பெண்கள் உள்பட 274 பேர் உயிரிழந்ததாக லெபனான் அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 5,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை லெபனானில் சிறிய அளவிலான தாக்குதல் மட்டுமே முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போது இவ்வளவு பெரிய தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது லெபனானை போருக்கு இழுக்கும் வகையில் இருப்பதாக கருதப்படுகிறது. இந்த தாக்குதலுகு லெபனான் அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் ஐ.நா அமைப்பும் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளது.
Also Read
-
”பாஜகவின் ஊதுகுழலாக உள்ள பழனிசாமியை 2026ல் மக்கள் அடித்து விரட்டுவார்கள்” : அமைச்சர் ராஜேந்திரன் உறுதி!
-
மருத்துவ படிப்பில் சேர 72,743 பேர் விண்ணப்பம் : கலந்தாய்வு எப்போது?
-
”அமித்ஷாவின் மிரட்டலுக்கு பயந்து கிடக்கும் எடப்பாடி பயனிசாமி” : ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?