உலகம்
“நான்தான் வென்றேன், எனவே கமலா ஹாரிஷுடன் மீண்டும் விவாதம் கிடையாது” - ட்ரம்ப் திட்டவட்டம் !
அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.
ஆனால், ஜோ பைடன் அமெரிக்க அதிபரானதில் இருந்து உக்ரைன்-ரஷ்யா போர், தைவான் விவகாரம் என பல்வேறு விவகாரத்தில் அமெரிக்கா சறுக்கி வந்தது. மேலும், உள்நாட்டிலும் வங்கி திவால், வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்தது.
அதன் உச்சமாக 81 வயதான ஜோ பைடன் வயதானவர்களே உரிய நினைவாற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு அடிக்கடி பொதுமேடைகளில் உளறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் அவர் அதிபர் தேர்தலில் அவர் மீண்டும் டிரம்பை எதிர்த்து போட்டியிடுவதால் உறுதியாக இருந்ததால் ஜனநாயக கட்சி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார்.
ஆனால், பிரச்சார மேடைகளில் அவர் தொடர்ந்து உளறி வருவது அரசியல் ரீதியாக அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு பதிலாக துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அமெரிக்காவில் வழக்கமாக நடக்கும் அதிபர் வேட்பாளர்களுக்கான விவாதம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையே நடைபெற்றது. இந்த விவாதத்தில் டொனால்ட் டிரம்ப் பின்னடைவை சந்தித்ததாக அமெரிக்க பத்திரிகைகள் கூறியிருந்தன.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மீண்டும் ட்ரம்புடன் மற்றொரு விவாதத்தில் பங்கேற்கத் தயாராக இருக்கிறேன் என கமலா ஹாரிஸ் கூறியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் கமலா ஹாரிஷுடன் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், “ஒருவர் சண்டையில் தோற்றால், அவர் மறுப்போட்டி வேண்டும் என்றுதான் கேட்பார்.அவ்வாறுதான் என்னுடம் மீண்டும் விவாதத்துக்கு கமலா ஹாரிஸ் அழைத்துள்ளார். கமலா ஹாரிஸுக்கு எதிரான விவாதத்தில் நான் வெற்றி பெற்றதாகக் கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன. இதனால் அவருடன் மீண்டும் விவாதம் கிடையாது. விவாதத்துக்கு ஏற்பாடுகள் நடைபெற்றாலும் அதில் நான் கலந்துகொள்ள மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !