உலகம்
உக்ரைனின் பின்னடைவை மறைக்க ரஷ்யா மீதான அதிரடி தாக்குதலா ? ராணுவ நிபுணர்கள் கூறுவது என்ன ?
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
இதனிடையே உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஒரு எதிர்பாராத அதிரடி தாக்குதல் நடத்தி ரஷ்யாவுக்குள் நுழைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஷ்யாவின் படைகள் உக்ரைனின் டோனஸ்க் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஒரு அதிரடி தாக்குதல் நடத்தி அந்த பகுதியில் முன்னேறியது.
ஆனால், தற்போது உக்ரைனின் பின்னடைவை மறைக்கவே அந்த நாடு இந்த திடீர் தாக்குதலை நடத்தியுள்ளதாக ராணுவ நிபுணர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தொடர்ந்து முன்னேறி வருகின்றன.
கிழக்கு உக்ரைனின் முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்க் நகரம் இரண்டு வாரத்தில் ரஷ்யாவின் பிடியில் விழும் நிலையில் உள்ளது. இதனை மறைக்கவே உக்ரைன் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது. அதே நேரம் முன்னேறிய உக்ரைனிய படைகள் எந்நேரமும் ரஷ்ய ராணுவத்தால் சுற்றிவளைக்கப்படலாம் என்ற நிலையில் இருப்பதால் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள உக்ரைனிய படைகளுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனை குறிப்பிட்டு மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கி வரும் நிலையில். உக்ரைனின் தோல்வி குறித்த செய்தி அதிகளவில் வெளியே வந்தால் அந்த நாடுகள் உக்ரைனுக்கு அளித்து வரும் ஆயுதங்களை குறைத்துக்கொள்ளும். ஆகவே அதனை தடுக்கவே உக்ரைன் ரஷ்யாவின் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Also Read
-
“கூச்ச நாச்சமற்று சட்டமன்ற மரபுகளை அடமானம் வைக்கும் த.வெ.க அரசு” : தி.மு.க IT WING கண்டனம்!
-
“ஒரு மாதத்தில் 175 பாலியல் வன்கொடுமைகள், 56 கொலைகள் நடந்தும் வாய் திறக்காத CM!” : உதயநிதி குற்றச்சாட்டு!
-
“நரசிம்மராவுக்கு ஏற்பட்ட நெருக்கடிதான் விஜய்க்கு வரப்போகிறது...” - முரசொலி தலையங்கம்!
-
TN Assembly : “தற்குறி ஆட்சி தமிழ்நாடே சாட்சி.. கதறல் கேட்குதா CM?” - பதாகைகளுடன் வந்த திமுக MLA-க்கள்!
-
தி.மு.க வெள்ளை அறிக்கை vs த.வெ.க வெள்ளை அறிக்கை : தி.மு.க IT WING விளக்கம்!