உலகம்
அமெரிக்க அதிபர் தேர்தல் : போட்டியிலிருந்து விலகினார் ஜோ பைடன்.. புதிய வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிப்பு !
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.
தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.
ஆனால், ஜோ பைடன் அமெரிக்க அதிபரானதில் இருந்து உக்ரைன்-ரஷ்யா போர், தைவான் விவகாரம் என பல்வேறு விவகாரத்தில் அமெரிக்கா சறுக்கி வருகிறது. மேலும், உள்நாட்டிலும் வங்கி திவால், வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது.
அதன் உச்சமாக 81 வயதான ஜோ பைடன் வயதானவர்களே உரிய நினைவாற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு அடிக்கடி பொதுமேடைகளில் உளறி வருவது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அவர் அதிபர் தேர்தலில் அவர் மீண்டும் டிரம்பை எதிர்த்து போட்டியிடுவதால் உறுதியாக இருந்த நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார்.
ஆனால், பிரச்சார மேடைகளில் அவர் தொடர்ந்து உளறி வருவது அரசியல் ரீதியாக அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவருக்கு பதிலாக தற்போது துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஜனநாயக கட்சிக்குள்ளேயே அதிகரித்து வந்தது.
இதன் காரணமாக தான் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். மேலும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸையும் முன்மொழிந்துள்ளார்.
இந்திய வம்சாவளி மற்றும் கறுப்பினத்தை சேர்ந்தவரான கமலா ஹாரிஸ் ஜோ பைடனை விட டிரம்ப்க்கு கடும் போட்டியை ஏற்படுத்துவார் என அரசியல் விமர்சகர்கள் மற்றும் கருத்து கணிப்புகளில் தெரியவந்த நிலையில், தற்போது அதிபர் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Also Read
- 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
 - 
	    
	      
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!