உலகம்
24 பிணையக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் : 39 சிறைவாசிகளை விடுதலை செய்த இஸ்ரேல் - முழு விவரம் என்ன ?
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே கத்தார் நாட்டின் தலையீட்டின் பேரில் 4 நாட்கள் போர் நிறுத்த அறிவிப்பு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் சார்பில் வெளியிடப்பட்டது. இந்த காலகட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் குழுவினர் விடுவிப்பார்கள் என்றும், அதற்கு பதிலாக இஸ்ரேல் சிறையில் இருக்கும் 150 பாலஸ்தீனர்களை விடுவிப்பதாக இஸ்ரேலும் ஒப்புக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று முதற்கட்டமாக ஹமாஸ் தான் பிடித்துவைத்திருந்த 24 பிணையக் கைதிகளை விடுவித்தது. அதேபோல இஸ்ரேல் தனது நாட்டு சிறையில் இருந்த 39 பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுதலை செய்துள்ளது.ஹமாஸ் விடுவித்த 24 பேரில் 13 இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், 10 பேர் தாய்லாந்து நாட்டையும், ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000! : நாளை (ஜன.8) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“Very sorry உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!